அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதாவின் பெயர் மறைக்கப்பட்டதா? – ஓபிஎஸ்
சென்னை: “தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக எங்கெல்லாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர்கள் மறைக்கப்பட்டதோ, அவற்றையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், கட்டணமில்லா கல்வி வழங்கும் திட்டம், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பைகள், காலணிகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், … Read more