அமெரிக்க இளைஞர் தமிழக பெண்: காணொலி மூலம் திருமணம் செய்ய நீதிமன்றம் அனுமதி

அமெரிக்க இளைஞருடன் தமிழக பெண் காணொலி மூலம் திருமணம் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வம்சி சுதர்ஷினி, மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘இந்தியாவைச் சேர்ந்த ராகுல் எல் மது, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். இவரும் நானும் பழகினோம். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.. இதற்கு எங்கள் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாங்கள் இருவரும் இந்து … Read more

ஐஐடி மெட்ராஸ் மாணவி பாலியல் வன்கொடுமை; இதுவரை போலீஸ் புகார் இல்லை

ஐஐடி எம் மாணவர் ஒருவர் தனது தோழி, நள்ளிரவில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அடையாளம் தெரியாத ஆணால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்த நிலையில், இதுகுறித்த விசாரணையை தொடங்கியுள்ளதாக நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. புகாரின்படி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், மாணவி வளாகத்தில் உள்ள என்ஏசி அருகே இருந்தபோது, ​​​​இருபது வயது மதிக்கத்தக்க ஒருவன் திடீரென மாணவி மீது பாய்ந்தான். இதில் மாணவி கீழே விழ, அவன் அவளை பாலியல் ரீதியாக தாக்கினான். மாணவி … Read more

டீயூசன் படிக்க வந்த மாணவியிடம் தவறான உறவு… மனைவி அளித்த புகாரின் பேரில் கணவன் கைது!

சென்னை திருவொற்றியூரில் டியூஷன் சென்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியிடம் தவறான உறவு வைத்திருந்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பெரியார் நகரைச் சேர்ந்த சேகர் என்பவர் அப்பகுதியில் 30வருடங்களாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார் இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டியூஷன் சென்டரில் படிக்க வந்துள்ளார். அப்போது மாணவிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டு தற்போது முறையற்ற தொடர்பில் இருந்து … Read more

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ' பரவல்

சென்னை: சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் பரவி வருகிறது. இங்குள்ள மருத்துவமனைகளில் தினமும் 50-க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு சிகிச்சைப் பெறுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக கண் மருத்துவர்கள் கூறியதாவது: காலநிலை மாற்றத்தால் ‘மெட்ராஸ் ஐ’ பரவி வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மெட்ராஸ் ஐ ஆகும். இது காற்று மூலம் பரவுகிறது. மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை … Read more

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து – ஓட்டுநர் நடத்துனர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒட்டுனர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு என்னுமிடத்தில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாரா விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசு பேருந்து ஓட்டுனர் தேவேந்திரன் நடத்துனர் முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த … Read more

மிகுந்த மன வேதனையுடன் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்தி.!!

அதிமுக மாவட்ட கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி இணை செயலாளர் உறவினர் மறைவிற்கு ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு எம்பாஸ், மாடசாமி அவர்களின் உறவினரும், திரு. K. முத்துவேல் தேவர் அவர்களின் மகனுமான திரு. மு. கடற்கரையாண்டி என்கிற வெள்ளபாண்டி அவர்கள் மண் சரிந்து … Read more

காவல் துறையுடன் சென்னை ஐஐடி இணைந்து அறிவியல் ரீதியாக சாலை பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: விபத்து ஏற்படுவதற்கு முன்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதும், விபத்துக்குப் பின் சம்பந்தப்பட்ட துறையின் திட்டமிடலும் அவசியம். அந்த வகையில், சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த தமிழக காவல் துறையுடன் இணைந்து சென்னை ஐஐடி செயல்படவுள்ளது. இதற்காக தமிழக அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழு மற்றும் சென்னை ஐஐடி-ன் சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சென்னை ஐஐடியின் ஆர்.பி.ஜி. ஆய்வகத்தால் … Read more

ஈரோடு டூ பாலக்காடு: நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்பட்டதால் கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் இருப்பதால் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் ஈரோடு சந்திப்பில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் நாள்தோறும் திருப்பூர், கோயம்புத்தூர் செல்லும் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து ரயில்வே … Read more

தி.நகர், கே.கே நகர், போரூர்… சென்னையில் இன்று (30-ம் தேதி) இந்த ஏரியாக்களில் மின் தடை!

Chennai Power Shutdown: சென்னையில் 30.07.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், கே.கே.நகர், அண்ணா நகர், அம்பத்தூர், போரூர், தண்டையார் பேட்டை, ஆவடி, பொன்னேரி ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தி நகர் பகுதி : மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு … Read more

சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை.!!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நாளை மறுநாள் முதல் தொடர்கிறது. 2023 மார்ச் 31ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.  இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளனர். சென்னையில் தமிழக தலைமை … Read more