கூட்டுறவு இளங்கோவனுக்கு செம செக்: எடப்பாடிக்கு புதிய சிக்கல்!
முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும் தான். முக்கியமான பணிகளை அவர்கள் மூலமாகவே எடப்பாடி பழனிசாமி செய்வார். அவர்களைவிடவும் பழனிசாமிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர் கூட்டுறவு இளங்கோவன். பழனிசாமியின் ஒவ்வொரு நிலையிலும் அவரோடு உடன் பயணிப்பவர். அவருக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர் என்கிறார்கள் சேலம் மாவட்ட அதிமுக வட்டாரத்தினர். அதனாலே நீண்டகாலமாக தன் வசம் வைத்திருந்த சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு இளங்கோவனிடம் கொடுத்தார். … Read more