தலைமுடியை பெற்றோர் வெட்டியதால், தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி.!

சமீபகாலமாகவே பள்ளி சிறுவர், சிறுமிகளின் தற்கொலை செய்திகள் அதிகமாக வந்த வண்ணம் இருக்கிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அரசு தலையிட்டு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பிலிருந்தும் வரும் கோரிக்கையாக இருக்கிறது. இத்தகைய சூழலில், கரூரில் ஒரு பெண் பெற்றோர் முடிவெட்டி விட்டதற்காக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெண்ணமலை பகுதியை சேர்ந்த ஸ்ரீனா என்ற இளம்பெண் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடைய … Read more

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா | தமிழக நகர்புறங்களில் 6 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி

சென்னை: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தமிழகத்தின் நகர்புறங்களில் 6 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் நகரம் (நகர்புறம்) என்றும் கிராமபுறங்களில் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் … Read more

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த இடைக்கால தடை!

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குனர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் (தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்) இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை. இந்நிலையில், தமிழகத்தின் … Read more

சமையற்கூடம் இல்லை, சமையலறை ஆன கழிவறை பகுதி: மேல்நிலைப்பள்ளியின் அவல நிலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மதாத்தனூர் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2015 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்பு, துவக்கப்பள்ளி அதே இடத்திலும் உயர்நிலைப்பள்ளி கிராமத்திற்கு அருகே குறிப்பிட்ட தொலைவில் ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அமைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் இபிஎஸ் அவர்களால் இந்த பள்ளி திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் பள்ளிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. … Read more

டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும்போது மின்சாரம் பாய்ந்து வயர்மேன் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து வயர்மேன் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி (58). காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் உள்ள மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று துலங்கும் தண்டலம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதாகி மின்சாரம் இல்லை என மின்வாரிய அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.  இதனால் டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுதை நீக்குவதற்காக வயர்மேன் பக்கிரிசாமி அனுப்பி … Read more

‘மகனின் ஆதாரங்களை அழித்த வழக்கு’- நாகர்கோவில் காசியின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன்

பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நாகர்கோவில் காசியின் அப்பா தங்கபாண்டி ஜாமீன் கோரிய வழக்கில் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பணமோசடி மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி, கடந்த … Read more

மகளின் திருமண வாழ்க்கை கசந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தொழிலதிபர் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

சென்னை விருகம்பாக்கத்தில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும் மகளின் திருமண வாழ்க்கை கசந்ததாலும் ஏற்பட்ட மன உளைச்சலில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். டெல்லி காவல் ஆணையராக பணிபுரியும் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் அரோராவுக்கு சொந்தமாக விருகம்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில், தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த மதுசுதன ரெட்டி என்பவர், 4 … Read more

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மதுரை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குனர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் … Read more

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா; வெள்ளை சாத்தியில் இன்று சுவாமி சண்முகர் வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி திருவிழாவில் 8ம் நாளான இன்று சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தியில் வீதியுலா வந்தார். அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா, கடந்த 17ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமியும் அம்மனும் பல்வேறு வானங்களில் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று 7ம் நாளான காலை 5.20 மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்ட சேவை நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு … Read more

“முக சிகிச்சைக்குப் பின் சிறுமி தான்யா நலமாக உள்ளார்”- தனியார் மருத்துவமனை

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி தான்யா அறுவை சிகிச்சை முடிந்து நலமாக உள்ளார் என தனியார் மருத்துவ நிர்வாகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆவடி அருகே வீராபுரத்தில் வசித்து வந்த ஸ்டீபன் – சௌபாக்யா தம்பதியின் மூத்த மகளான தானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து புதிய தலைமுறையில் செய்தி கடந்த 16ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இலவசமாக சிகிச்சை … Read more