கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவன்.. காதலர்களை ஏவி கொலை செய்த மனைவி..!

கள்ளகாதலை தட்டி கேட்ட கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், சிங்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைகனி.  இவருக்கு சாந்தி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற நேரத்தில் சாந்தியின் சகோதரர் முறையுள்ள பார்த்திபன், கலைமோகன் என்ற இருவருடன் முறையற்ற தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிச்சைகனிக்கு விஷயம் தெரியவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சாந்தி கள்ளகாதலர்களுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்டுள்ளார். … Read more

காதல் திருமணம் செய்த மகளையும் காதலனையும் வெட்டிக் கொன்ற தந்தை..! குடிகார காதலுக்கு எதிர்ப்பு..!

காதல் திருமணம் செய்த மகளையும், மகளின் காதல் கணவனையும் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் ரேஸ்மா. 20 வயதான இவர் கோவில்பட்டி கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ரேஸ்மாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த உறவுக்கார இளைஞர் மாணிக்கராஜ் என்பவருக்கும் காதல் இருந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வெளி நாட்டில் இருந்து திரும்பி பணம் … Read more

டி-23 புலியை உயிருடன் பிடிக்க முக்கிய பங்காற்றிய 3 காவலர்களுக்கு சிறந்த களப்பணியாளர் விருது

சென்னை: டி-23 புலியை உயிருடன் பிடிப்பதில் முக்கியப் பங்காற்றிய 3 காவலர்கள், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சிறந்த களப்பணியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுற்றிவந்த 13 வயதான டி-23 புலி நான்கு பேரை வேட்டையாடிக் கொன்றது. அதேபோல் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியது. 20 நாட்களுக்கு மேலாக வனத்துறையினர் போராடி இந்தப் புலியை உயிருடன் பிடித்தனர். இந்தப் பணியின்போது தினமும் காலையில் … Read more

`நீ ஓட்டு பஸ்ஸை…’- ஆட்டோ ஓட்டுநரிடம் பேருந்தை கொடுத்த அரசு ஓட்டுநர்! இறுதியில் ட்விஸ்ட்!

தேனியில் அரசு பேருந்தை லுங்கி அணிந்தவாறு ஆட்டோ ஓட்டுனரொருவர் இயக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பேருந்து ஓட்டுனரை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தேனியில் பழனிச்செட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பனிமனையில் இருந்து, தேனி வீரபாண்டியில் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிக்கு தினமும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதில் கடந்த ஜூலை 11ம் தேதி தேனி டூ சட்டக்கல்லூரி அரசு பேருந்தை அரசு ஓட்டுநர் பாண்டி விஸ்வநாத் என்பவர் இயக்கச் சென்றுள்ளார். பாண்டி … Read more

சுகர் பாதித்த பெண்களுக்கு செக்ஸில் திருப்தி இன்மை: ஆய்வு கூறுவது என்ன?

நீரிழிவு என்பது உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காததால் ஏற்படுகிறது. பொதுவாக இந்த நோய் சிறியவர்கள், நடுத்தரம் மற்றும் முதியவர்கள் என வித்தியாசம் பார்ப்பதில்லை.எனினும் பெண்களை காட்டிலும் ஆண்களே பெருமளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனக் ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், நீரிழிவு பாதிக்கப்பட்ட பெண்கள் உடலுறவில் முழு திருப்தியை எட்ட முடியாதாம். அதாவது அவர்கள் உடலுறவு கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களால் இயல்பாக ஒரு தம்பதி அனுபவிக்கும் இன்பத்தை முழுமையாக … Read more

திருவள்ளூர் || 12ம் வகுப்பு மாணவி தற்கொலை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சரளா என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இதனை அடுத்து,     காலை உணவு சாப்பிட சென்ற அவர் திரும்பி அறைக்கு சென்றுள்ளர. நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் அறைக்கு … Read more

பாஜக பாத யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: சிவகாசி டிஎஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க தமிழக அரசு இடம் ஒதுக்க வலியுறுத்தி பாஜக நடத்த திட்டமிட்டிருந்த பாத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சிவகாசி டிஎஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சாந்தகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், ஜவுளி பூங்கா … Read more

`இதுவே தனியாரிடம் ஒப்படைத்திருந்தால்..’- தமிழக அரசை சரமாரியாக கேள்வி கேட்ட நீதிமன்றம்!

`வரும் காலங்களில் யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது’ என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவத்தி ஆகியோர் அடங்கிய மர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழக அரசு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், `10 ஆண்டுக்குள் … Read more

‘உத்தரவு வாபஸ் துறை அமைச்சர்’ யார் தெரியுமா? திருச்சி ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய அ.தி.மு.க

க. சண்முகவடிவேல், திருச்சி திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்துவரி,வீட்டுவரி உள்ளிட்டவைகள் கட்டண உயர்வை கண்டித்து, தமிழக முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, அண்ணா சிலை திடலில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் … Read more

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: அமைச்சர் அன்பில் மகேஸ்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் மேநிலைப் பள்ளியில் வன்முறை நடைபெற்று இயங்க முடியாத சூழலில், அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த நிலையில், அவரது உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு கடந்த 17-ம் தேதி பள்ளியில் பெரும் வன்முறை நிகழ்ந்தது. இந்த வன்முறையின்போது, … Read more