அடிப்படை உரிமைகளான தூயக் காற்று, நீரை உறுதி செய்ய வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு முறைமன்ற நடுவம் உத்தரவு 

சென்னை: அடிப்படை உரிமைகளான தூயக் காற்று, நீரை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டையைச் சேர்ந்த விஜயன் மற்றும் விஜயக்குமார் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளின் முறைமன்ற நடுவத்திற்கு அனுப்பி உள்ள மனுவில், “சென்னை மாநகராட்சி, மணலி மண்டத்தில் 6-வது வார்டில் சடையங்குப்பம் கிராம் டிகேபி நகரில் உள்ள ஜானகிராமன் ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து அதிக அளவு புகை வெளியாகி காற்று மாசு ஏற்படுகிறது. … Read more

டாஸ்மாக் பணி நியமனங்கள்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்த நிலையிலும், நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளையும் வகுக்காதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராக பணியாற்றிய மிகிரன் என்பவர், 2006ஆம் ஆண்டில் சூப்பர்வைசராக நியமிக்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டில் மீண்டும் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பான உத்தரவை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். விசாரணையின் போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட … Read more

அறுவை சிகிச்சையைக்கூட செயற்கைக்கோள் வழியாக கண்டறியலாம் – மயில்சாமி அண்ணாதுரை

வருங்காலங்களில் மருத்துவ அறுவை சிகிச்சையைக்கூட செயற்கைக்கோள் வழியாக கண்டறியலாம். கணிணி புரட்சியைபோல வருங்காலங்களில் செயற்கைக்கோள் மூலம் பல்வேறு துறைகளின் பணிகளை செய்ய உள்ளோம் என தஞ்சையில் முன்னாள் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டியளித்துள்ளார். இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்களின் சங்கத்தின் 45-ஆவது மாநில மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. அதில் பல்வேறு மருத்துவ நவீன தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் பல்வேறு மருத்துவர்கள் தங்களது அனுபவங்களை இளம் மருத்துவர்களுக்கு தெரிவித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் சந்திரயான் … Read more

செருப்பு வீசினோமா? பிரச்னைக்கு காரணம் பி.டி.ஆர் தான்: பா.ஜ.க விளக்கம்

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பாஜகவுக்கு என்ன தகுதி உள்ளது இங்க வர்றீங்க என கேட்டார். முதலில் அவருக்கு என்ன தகுதி உள்ளது? ஒன்றிய அரசு என சொல்லி பிரிவினைவாதத்தை தூண்டும் அமைச்சர் பி.டி.ஆருக்கு என்ன தகுதி உள்ளது? உயிரிழந்த லட்சுமணனுக்கு மருத்துவம் பார்த்து … Read more

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி: மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து அடிக்கும் சென்னை மாநகராட்சி

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ செய்தியின் எதிரொலியாக, மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து அடிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி மாநகரில் பல பகுதிகளில் கொசுக்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தளத்தில் செய்தி வெளியானது. இந்தச் செய்தியின் எதிரொலியாக மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து அடிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,062 கி.மீ. நீளமுள்ள … Read more

பிடிஆர் வாகனம் மீது செருப்பு வீச்சு – மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது, பாஜகவினர் செருப்பு வீசி தாக்கிய சம்பவத்திற்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீரமரணம் அடைந்தார். அவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்து வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் மரியாதை … Read more

ரஜினிகாந்த் ஆளுநர் சந்திப்பு தேநீர் விருந்தாகத்தான் இருக்கும் – கார்த்தி சிதம்பரம்

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்த நிகழ்வு தேநீர் விருந்தாகத்தான் இருக்கலாம் என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. பாதயாத்திரையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.கார்த்தி சிதம்பரம்,  தேசியக் கொடியை விற்பனை செய்கிறார்கள். அந்த விளம்பரங்களில் ஜான்சிராணி, சுபாஷ்சந்திர போஸ், திலக் உள்ளிட்ட வடநாட்டு சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூறுகிறார்கள். தென்னாட்டு … Read more

“பழனிவேல் தியாகராஜன் பண்பாடின்றி நடந்துகொண்டார்” – மதுரை மாவட்ட பாஜக தலைவர் குற்றச்சாட்டு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பண்பாடு இல்லாமல் நடந்து கொண்டார் என்று மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் குற்றம்சாட்டினார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 6 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக … Read more

போலீஸ் இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்? பிடிஆர் கார் மீது ஆவேசமாக பாய்ந்த பாஜக கும்பல்

ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக மதுரையில் அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்க விரைந்துள்ளனர். அது போல தமிழக நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை விமான நிலையம் நோக்கி வந்தபோது காரை இடை மறித்த பாஜகவினர் கொலை வெறியுடன் அந்த காரை தாக்கியத்துடன் செருப்பை வீசி எறிந்தனர். வெறும் 10 பேர் கொண்ட அந்த கும்பல் … Read more

"தேசியக் கொடியை ஏற்றுவதிலும் அரசியல் செய்கிறீர்களே?" – அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதம்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை உச்சிப் பிள்ளையார் கோயிலில் பாஜகவினர் போராட்டம் காரணமாக அரசு அதிகாரியால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஆகஸ்ட் 15 இந்திய நாட்டின் 75-வது பவள விழா சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகள் மற்றும் பிரதான இடங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி 13-ஆம் தேதியிலிருந்து அனைத்து வீடுகளிலும் கொடி ஏற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் திருச்செங்கோட்டில் உயரமான பகுதியான உச்சிப் பிள்ளையார் கோயிலில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக … Read more