ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 10வது முறையாக ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 10-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த 1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை பொய்யாழி இறந்த நிலையில், தாயார் ராஜேஸ்வரி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் … Read more