எதிர்பார்த்து ஏமாந்த அஜித் ரசிகர்கள் – மகிழ்ச்சியில் திளைக்க வைத்த யாஷிகா ஆனந்த்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடிகர் அஜித்குமாரை காண வந்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள். ஆனால் நடிகை யாஷிகா ஆனந்தை பார்த்த மகிழ்ச்சியில் கலைந்து சென்றனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் ஏழு நிலை புதிய ராஜகோபுரம் கும்பாபிஷேக விழா கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (24.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 24/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 15 நாட்டு தக்காளி 10/7 உருளை 40/34/27 சின்ன வெங்காயம் 40/30/26 ஊட்டி கேரட் 45/40/30 பீன்ஸ் 60/55/50 பீட்ரூட். ஊட்டி 50/45 கர்நாடக பீட்ரூட் 20/15 சவ் சவ் 20/18 முள்ளங்கி 12/10 முட்டை கோஸ் 15/13 வெண்டைக்காய் 28/25 உஜாலா கத்திரிக்காய் 40/30 வரி கத்திரி 25/20 காராமணி … Read more

போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ மனைவியை கொன்று புதைத்த கொள்ளையன்.. எஸ்.பி.ஆபீஸ் அருகில் கொடூரம்.!

கடலூர் எஸ்.பி. அலுவலகம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மனைவியை கொடூரக் கொலை செய்து நகைகளைப் பறித்துச்சென்ற போதை இளைஞர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழ்காங்கேயன்குப்பத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சதாசிவம். இவரது மனைவி மலர்க்கொடி இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். கடைசி மகன் சிவகுரு. போலீஸ்காரராக உள்ளார். இவர் கடலூர் புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் டிரைவராக … Read more

விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்: விரட்டி விரட்டி கடித்த தெருநாய் – 11 பேர் காயம்

கோவை கரும்புக்கடை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்துக் குதறிய தெருநாய் இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84-வது வார்டில் உள்ள கரும்புக்கடை மற்றும் ஞானியார் நகர் பகுதியில் அப்பகுதி குழந்தைகள் வழக்கம்போல் விளையாடிக் கொண்டிருந்தனர். விடுமுறை தினம் என்பதால் சற்று அதிகமாகவே கூட்டம் இருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் சுற்றிக் திரிந்த தெருநாய் ஒன்று திடீரென விளையாடிக் கொண்டிருந்த 10 குழந்தைகள் உட்பட 11 பேரை கடித்தக் … Read more

மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னை: மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் பனகல் மாளிகை, வில்லிவாக்கம் பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேளச்சேரி காந்தி சாலை, அம்பத்தூர் தொழிற்சாலை பேருந்து நிலையம், தண்டையார்பேட்டை அஞ்சல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், பாஜக மாவட்டத் தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். பாஜக மாநிலச் செயலாளர் … Read more

சென்னையில் இன்று( ஜூலை 24-ம் தேதி) எந்த ஏரியாவில் மின் தடை?

சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அம்பத்தூர்/சிட்கோ துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் அம்பத்தூர் பகுதி : சிட்கோ; 5வது, 6வது, 7வது தெருக்கள், கண்ணன் கோவில் தெரு. மேலும், சென்னையில் 25.07.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய … Read more

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி.. ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க … Read more