தூத்துக்குடி: செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் – காரணம் இதுதான்!

இடப்பிரச்னை காரணமாக தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (35). தச்சு வேலை செய்து வரும் இவர் பங்களா தெரு சண்முகம் என்பவரிடம், ராஜகோபால் நகர் 1வது தெருவில் ஒன்றறை சென்ட் இடத்தை மொத்தம் 6 லட்சம் கிராயம் பேசி 4 லட்சம் ரூபாய் அட்வான்ஸாக கொடுத்துள்ளார். பின்னர் அந்த இடத்தில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடும் கட்டியுள்ளார். … Read more

17 வயது முடிந்தால் வாக்காளர் அட்டைக்கு ‘அட்வான்ஸ் புக்கிங்’ – இந்திய தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை: “17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள முடியும். அவர்களுக்கு 18-வது பிறந்த தினத்தில் பரிசாக வீட்டிற்கு வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும்” என்று இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கும் விழா சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் … Read more

கோவில் நிலத்தை மீட்க கோரியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

தனிநபர்களுக்கு கடந்த 1971ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் உள்ள கரியபெருமாள் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு கோவில் வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த … Read more

ஜப்பானின் மலர் அலங்காரம் – இந்திய சமையல் இணைந்த "மிஷ்ரானா" புத்தக வெளியீடு!

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ மற்றும் ஜப்பான் இந்திய இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடடும் விதமாக ஒன்றிணைந்து ஜப்பானின் இகேபனா எனும் கலையை இந்திய பாரம்பரியதுடன் செய்வது மற்றும் இந்திய பாரம்பரிய சமையல் முறை இரண்டும் ஒன்றாக இடம்பெற்றியிருக்கும் “மிஷ்ரானா” என்ற புத்தகம் சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தின் கலாச்சார பிரிவு சார்பாக வெளியிடப்பட்டது.  இகேபனா என்பது ஜப்பானிய பாரம்பரிய கலையான மலர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் … Read more

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள கலப்பட டீசல் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்த கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.80 லட்சம் மதிப்புள்ள கலப்பட டீசலுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதுகாப்பிற்காக செய்த செயல் உயிரையே பறித்த கொடூரம்.. மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்

சீர்காழி அருகே வீட்டின் பாதுகாப்பிற்காக கதவு மற்றும் பீரோவில் மின் இணைப்பு கொடுத்து வசித்துவந்த மூதாட்டி அதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (68). சீர்காழி நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த நிலையில் குழந்தைகளும் இல்லாததால் தனிமையில் வசித்து வந்துள்ளார். தன்னுடைய வீட்டின் பாதுகாப்பிற்காக இரவு நேரத்தில் கதவு மற்றும் பீரோவிற்கு மின் இணைப்பு கொடுத்து … Read more

கல்லல் | விவசாயிகளின் வீடு தேடி வரும் விதை நெல்: கிராம மக்கள் உதவியோடு விவசாயத்தை மீட்டெடுத்த பட்டதாரி இளைஞர்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே விவசாயத்தை கைவிட்ட பலரையும் மீண்டும் விவசாயத்தை நோக்கி வர வைத்துள்ளார் பட்டதாரி இளைஞர் ஒருவர். கல்லல் அருகேயுள்ள வேப்பங்குளம் ஊராட்சியில் புதுவேப்பங்குளம், பழைய வேப்பங்குளம், தேர்வலசை, அச்சினி, கல்குளம், சந்தனேந்தல் தெம்மாவயல் என 7 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 2,000 பேர் வசிக்கின்றனர். 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. வானம் பார்த்த பூமியாக உள்ள இக்கிராமங்களில் வறட்சி, விவசாய ஈடு பொருட்கள் கிடைப்பதில் சிரமம், விளைபொருட்களுக்கு விலை … Read more

தேமுதிகவில் அதிரடி மாற்றம்?; இருக்கைக்கு வரும் பிரேமலதா!

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் தற்போது உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஓடியாடி கட்சி பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டாக ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டு இருப்பது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கட்சி பணிகள் தொய்வடைந்ததால் சமீபத்திய தேர்தல்களில் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. எனவே சோர்ந்துபோய் உள்ள தேமுதிக தொண்டர்கள் மீண்டும் சுறுசுறுப்பாக கட்சி பணியாற்ற வேண்டுமானால் விஜயகாந்துக்கு பதிலாக … Read more

வளைகாப்பு நடத்த கேட்டதால் ஆத்திரம்… கர்பிணி மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவன்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் இரண்டாவது மகன் 20 வயது கொண்ட அற்புதராஜ். இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் விருத்தாச்சலம் காய்கறி சந்தையில் வேலை செய்து வருகிறார்.  இதேபோல் விருத்தாச்சலம் அடுத்த வீராரெட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை- லதா தம்பதியினரின் ஒரே மகள் 18 வயது கொண்ட சக்தி. ஏழுமலை இறந்த பின்பு, தனது ஒரே மகளுடன், தாய் லதா, விருத்தாச்சலம் பெரியார் நகரில் வீடு கட்டி … Read more

கோயம்புத்தூரில் சில பகுதிகளில் கனமழை: சுரங்கப்பாதைகள் தண்ணீரில் முழ்கின

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக கோயம்புத்தூரில் சுரங்கப்பாதைகள் தண்ணீரில் முழ்கிய நிலையில் காணப்படுகிறது.