வேளாண் திட்ட ஆலோசனை கூட்டம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த கூட்டம்  இ சேவை மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்‌. கூட்டத்தில், வேளாண் அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த தினத்தின் கீழ் என்னென்ன பணிகள் ஊராட்சியில் செயல்பட உள்ளன என்பது குறித்து விவசாயிகளிடமும் கிராம மக்களிடமும் எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறுகையில், வாலாஜாபாத் … Read more

“டப்பிங், மிமிக்ரி, எடிட்டிங்…” – ஆடியோ விவகாரத்தில் சரவணன் மீது போலீஸில் மதுரை பாஜகவினர் புகார்

மதுரை: “போன் உரையாடலை மிமிக்ரி செய்து பரப்பிய முன்னாள் பாஜக நிர்வாகி சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதுரை காவல் ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்தனர். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுரை ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வையொட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரனும் பேசியதாக சர்ச்சைக்குரிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது. இது குறித்து மதுரை மாவட்ட, மாநகர (பொறுப்பு) … Read more

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் புதிய நூலக கட்டிடம்; செல்வம் எம்பி அடிக்கல் நாட்டினார்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டிடத்திற்கு எம்.பி.செல்வம் அடிக்கல் நாட்டினார். திருக்கழுக்குன்றம் மலையடிவாரம் பகுதியில் கடந்த 1962ம் ஆண்டு நூலகம் துவங்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்டு நூலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், பழமையான அடிப்படை வசதிகளற்ற கட்டிடம் என்பதால் கட்டிடத்தின் மேற்கூரைகள் இடிந்தும், பக்கவாட்டு சுவர்கள் இடிந்தும், ஜன்னல், கதவுகள் சேதமாகி விட்டதால், மழைக்காலங்களில் கட்டிடத்தின் உள்ளே மழை நீர் ஒழுகி நூலகத்தின் புத்தகங்கள் நனைந்து சேதமாகி விடுகிறது. … Read more

’கே.என்.நேரு இனிமேல் அவ்வாறு பேசாமலிருக்க ஸ்டாலின் மூலம் அறிவுறுத்தப்படும்’-ஆர்.எஸ்.பாரதி

“தந்தை மகளிடம் பேசுவதுபோலதான் மேயர் பிரியாவிடம் அமைச்சர் நேரு பேசினார் என்றாலும், நேரு இனிமேல் அவ்வாறு பேசாமல் இருக்கும் வகையில் ஸ்டாலின் மூலம் அறிவுறுத்தப்படும்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி தனது கடந்த கால தவறுகளை மறைக்க நேற்று தனது வயிற்றெரிச்சலை, பேட்டி எனும் பெயரில் பொய் மூட்டையாக அவிழ்த்து விட்டுள்ளார். திமுக ஆட்சியில் … Read more

இப்படி துரோகம் செய்யலாமா? ஆறுகுட்டியுடன் அ.தி.மு.க பிரமுகர் வாக்குவாதம் ஆடியோ வைரல்

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி திமுகவில் இணைந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவர் அவர் திமுக”வில் இணைந்து தொடர்பாக அவருடன் தொலைபேசியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அது தொடர்பாக அவர் போட்டியிட்ட கவுண்டம்பாளையம் தொகுதியை சேர்ந்த துடியலூர் பகுதி எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் எம்.ஆர்.நாகராஜன் ஆறுகுட்டியுடன் … Read more

எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்ற 127 பேர் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததற்கான காரணம் கடின பயிற்சி இல்லாதது-போலீசார் தகவல்..!

தமிழக காவல்துறையில் புதிதாக சேர்க்கவுள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டதில் வெற்றி பெற்ற 413 பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் மாவட்டம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.  கடந்த 23-ந்தேதி தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு உயரம் அளவீடு செய்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டதன் முடிவில், முதல் நாளில் 284 பெண்கள் கலந்து கொண்டதில் 248 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.  இதையடுத்து, நேற்று முன்தினம் 2-ம் கட்ட … Read more

‘‘எனக்கு துரோகம் செய்தால் நான் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?’’ – வைரல் ஆடியோவில் ஆறுக்குட்டி

கோவை: துரோகம் செய்துவிட்டதாக திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் அதிமுக உறுப்பினர் வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுக்குட்டி. 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்நிலையில் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சில காலம் அமைதியாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி கடந்த 24-ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த விழாவில் … Read more

புதுப்பட்டினம் ஊராட்சியில் வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூல் வேட்டை; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: புதுப்பட்டினம் ஊராட்சியில் அடாவடி வசூல் வேட்டையால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவதால், இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டினம் ஊராட்சியில் பஜார் வீதிக்கு வருகின்ற லாரி, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு தினசரி வரி வசூல் செய்வதற்காக ஊராட்சி மூலம் ஆண்டுக்கு ஒருமுறை என ஏல முறையில் குத்தகை விடப்பட்டு அதை புதுப்பட்டினத்தை சேர்ந்த ஒருவர் குத்தகை எடுத்து புதுப்பட்டினத்திற்கு லோடு எற்றி … Read more