'கபட நாடகமாடும் செந்தில் பாலாஜி' – போட்டு தாக்கிய அண்ணாமலை

“மின் கட்டணம் உயர்வு குறித்து மக்களிடையே கருத்து கேட்டு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கபட நாடகம் ஆடுகிறார்” என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் இன்று, செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது: பாஜக கொள்கை ஏற்று யார் வந்தாலும் முழு அனுமதி உண்டு. பாஜகவை பொறுத்தவரை குறுகிய மனப்பான்மையுடன் இருக்கும். நம்மிடம் இருந்து சென்று விட்டார்; திரும்பி வரும் போது ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற எண்ணம் … Read more

வசூல் வேட்டைக்காக செந்தில் பாலாஜி இதை செய்கிறார் – அண்ணாமலை

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அதன் தலைவருமான அர்ஜுன மூர்த்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இன்று இணைத்துக்கொண்டார். அதன்பின்னர் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “பாஜகவின் சித்தாந்தம், கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும், இக்கட்சியில் இணைவதற்கு அனுமதி இருக்கிறது” என்று பேசினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ தமிழ்நாடு மின்துறை அமைச்சர் மற்றும் அவரது சகாக்கள், பெரிய … Read more

சொத்துப் பிரச்சனையில் மாற்றுத்திறனாளிகள் கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை: ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு

கிருஷ்ணகிரி: தளி அருகே முதல் கணவரின் மகள், மகணை கொன்ற வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொலை வழக்கில் வெங்கடலட்சுமி, சுரேஷ், கோபால்,சாந்தி, நவீன் ஆகியோருக்கு  நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சொத்துப் பிரச்சனையில் மாற்றுத்திறனாளிகள் மஞ்சு,முத்தப்பாவை கொன்ற வழக்கில் ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழக்கப்பட்டது.

கோவில்பட்டி: ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை! முன் விரோதம் காரணமா என விசாரணை

கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தினை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் விவசாய வேலைக்காக சென்ற பொன்ராஜ் தனது தொழுவில் அமர்ந்து இருக்கும் போது, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து சரமாரியமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பொன்ராஜ் உயிரிழந்தார். … Read more

மாடர்ன் லவ் சென்னை, தி வில்லேஜ்… வரிசைகட்டும் தமிழ் வெப் சீரிஸ்கள்

கொரோனா காலகட்டத்தில், வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்காக அமைந்தது ஒடிடி தளங்கள். அப்போது தியேட்டர்கள் இல்லாத காரணத்தால் பல படங்கள் ஒடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கொரோனா தொற்று குறைந்து தியேட்டர்கள் திறந்துவிட்டாலும், ஒடிடி தளத்திற்கு உண்டான மோகம் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே போல் முன்னணி நடிகர்கள் பலரும் சினிமாவில் நடிப்பதை விட ஒடிடி தளத்தில் வெளியாகி வரும் வெப் தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் … Read more

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மேமாளூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி உத்திரியநாதன் (40). இவர் எலவானசூர்கோட்டை பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.  அப்பொழுது பல்லவாடி பேருந்து நிலையம் அருகே வந்த போது எதிரே செங்கனாங்கொல்லை பகுதியை சேர்ந்த ஆதிசங்கர்(34) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது உத்திரநாதன் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த உத்திரியநாதனை அப்பகுதியில் … Read more

மாதம் 51 கோடி… மாநிலம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்துவது சிரமம்: தமிழக அரசு

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில், மதுபானங்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்த திட்டம், 10 மலைப்பகுதி மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், … Read more

இன்னும் ரெண்டு நாட்கள் தான்… திமுகவிற்கு தாவும் முக்கியப் புள்ளிகள்- செந்தில் பாலாஜி சர்ப்ரைஸ்!

கோவை ஈச்சனாரி பகுதியில் முதல்வர் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெறும் ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி கோவை வருகை தருகிறார். இதையடுத்து ஈச்சனாரி பகுதியில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் … Read more

அண்ணாமலைக்கு சொல்வதை புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டும்: செந்தில்பாலாஜி காட்டம்!

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காட்டமாக பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். ‘பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் இல்லையென்றால் அவர் பல விஷயங்கள் பற்றி பேசி நேரத்தைக் வீணடிக்க வேண்டாம். நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை அவர் பதலளிக்கவில்லை. எனவே அவர் பற்றிய கேள்விகளை செய்தியாளர்கள் தவிர்த்துவிடலாம்’ என … Read more

பெருந்துறையில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது

ஈரோடு; பெருந்துறையில் உரிய ஆவணங்களின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தை சேர்ந்த அலாவுதீன், ஆம்சுஸ்ஜாமன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.