திருப்பத்தூர் அருகே கிராமத்தை சூழ்ந்த மழைநீர்: ஆண்டுதோறும் தொடரும் அவலம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கிராமத்தை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமப்படுகின்றனர். கண்டரமாணிக்கம் ஊராட்சி ஜீவா நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மழைக்காலங்களில் கண்டரமாணிக்கம் கிராமத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் ஜீவாநகரை சூழ்ந்து கொள்ளும். ஆனால், ஜீவா நகரில் மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் ஜீவாநகரை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கிராம மக்கள் சிரமப் படுகின்றனர். மழைக்காலம் தொடங்கிய … Read more