சேகர் ரெட்டி மீதான வருமான வரித்துறை வழக்கு ரத்து..!- உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை..!

திமுக, அதிமுக என இரண்டு கட்சி ஆட்சிகளிலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கக்கூடியவர் சேகர் ரெட்டி.2 ஆயிரத்து 682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர்ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைனிங் என்ற நிறுவனம், கடந்த 2014-15 முதல் 2017-18ம் மதிப்பீட்டு ஆண்டுகளில் 384 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரிக் கணக்கை … Read more

ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசையில் ஏவுகணை தளம் அமைந்தால் இவ்வளவு நன்மைகளா!

ராக்கெட் ஏவுவதற்கு மிக பொருத்தமான இடம் இந்த குலசேகரப்பட்டினம். நிலம்  ஆர்ஜிதம் முடிந்தது, அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என குலசேகர பட்டினத்தில் ஆய்வு மேற்கொண்ட இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.   இஸ்ரோவின் பிரதான ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது. ஆனாலும், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுவதற்கான தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்திரா காந்தியின் காலத்திலிருந்தே விஞ்ஞானிகளால் … Read more

அசாமில் ரூ.5,500 கோடியில் என்எல்சியின் புதிய மின் திட்டம்: மாநில மின்துறையுடன் இணைந்து செயல்படுத்துகிறது

கடலூர்: மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், நெய்வேலி அனல் மின்நிலையங்களில் மட்டும் மின் உற்பத்தி செய்து வந்தது. தற்போது இந்நிறுவனம், காற்றாலை மற்றும் சூரியஒளி போன்ற புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறை ஆகியவற்றில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி உள்ளது. நெய்வேலி மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா,ஜார்க்கண்ட் மாநிலங்களிலும், அந்தமான் தீவுகளிலும் தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அசாமில் ரூ.5 ஆயிரத்து 500 கோடி … Read more

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம்: நீதிமன்றம் காட்டிய அதிரடி!

தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பத்தாயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கடடாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும் அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் … Read more

நாமக்கல்: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் K.P.P.பாஸ்கரின் பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், பாஸ்கருக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, சட்டப்படியான வருமானத்தை விட பாஸ்கர் தான் எம்.எல்.ஏவாக இருந்த காலத்தில் 315 சதவிகிதத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச … Read more

கனல் கண்ணன் கைது ஆவாரா? முன்ஜாமின் மனு தள்ளுபடி

Kanal Kannan anticipatory bail plea dismissed in Periyar statue case: பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்துக்கள் கூறிய கனல் கண்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், கனல் கண்ணன் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்துகள் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதையும் படியுங்கள்: லாரிகள் … Read more

பெற்றோர் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி லட்சுமணன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் விமல்(18) பொன்னேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விமல், படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விமல் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி … Read more

போதைப் பொருள் தடுப்பில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுப்பதில் கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். போதைப் பொருள் தடுப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். ‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தின் தொடக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் … Read more