#BigBreaking: ஸ்ரீமதியின் தாயிடம் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. தாய் செல்வி கேட்ட அந்த ஒரு விஷயம்.!

கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து CBCID விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் … Read more

“பிரதமர் என்றும் பாராமல் தொந்தரவு” – மோடியின் 'கருப்பு' கருத்துக்கு தமிழக அரசியல்வாதிகளின் ரியாக்‌ஷன்

சென்னை: கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஒரு ட்வீட் பகிர்ந்திருந்தார். அதில் காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிடாமல், “சிலர் ஆகஸ்ட் 5ஆம் தேதி பில்லி, … Read more

கோவை: ஆய்வின்போது வெடித்த எரிவாயு குழாய்! ஆள் உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட கற்கள்! வீடியோ

கோவை சேரன்மாநகர் பகுதியில் எரிவாயு குழாய் ஆய்வின் போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆள் உயரத்திற்கு மணல் மற்றும் கற்கள் தூக்கி வீசப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பதிக்கபட்ட குழாய்களை ஆய்வு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக பதிக்கப்பட்ட குழாய்களில் அதிக அழுத்ததுடன் காற்று செலுத்தி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட சேரன் மாநகர் … Read more

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடரும்: தமிழக அரசு உறுதி

சென்னை: தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி உறுதி அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இத்திட்டத்தினை அரசு கைவிட உத்தேசித்துள்ளதாகவும் சில பத்திரிகை … Read more

சட்ட விரோதமாக கம்பி வேலியில் பாய்ச்சப்பட்டதா மின்சாரம்? தனியார் தோட்டத்தில் புள்ளிமான் பலி

தனியார் நர்சரி தோட்டத்தின் வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழந்தது. சட்ட விரோதமாக கம்பி வேலியில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இறந்ததா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான நர்சரி தோட்டத்தில் ஆண் புள்ளி மான் ஒன்று அங்கிருந்த நைலான் வேலியில் சிக்கி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் கல்லார் ரயில்வே கேட் அருகே தனியாருக்கு சொந்தமான … Read more

ஐ.ஒ.சி எரிவாயு குழாய் வெடித்ததாக வெளியான தகவல் தவறு ; குழாய் பதிக்கப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த சேற்று நீர் வெளியேறியதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சியில் ஐ.ஒ.சி குழாய் வெடித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவந்த நிலையில், அங்கு நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் குழாய் பதிக்கும் இடத்தில் தேங்கியிருந்த சேற்று நீர் வெளியேறியதாகக் கூறியுள்ளார். தண்ணீர் பந்தல் சாலையில் பதிக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய் வழியாக எரிவாயு செலுத்தி சோதனை நடைபெற்றபோது பல அடி உயரத்திற்கு சேற்று நீர் பீய்ச்சி அடித்தது. அப்பகுதியை ஐ.ஒ.சி அதிகாரிகளுடன் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், அங்கு அதிகப்படியாகத் தேங்கியிருந்த சேற்றுநீர் மட்டுமே … Read more

மெரினா ஸ்மார்ட் கடைகள்: ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை: மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, 900 ஸ்மார்ட் கடைகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இந்த கடைகளை பெற 14 ஆயிரத்து 827 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், ஏற்கெனவே கடை வைத்திருப்பவர்களுக்கு 540 மற்றும் புதிதாக கடை வைக்க விரும்புபவர்களுக்கு 360 கடைகள் ஒதுக்கப்பட்டன. மாநகராட்சி ஒதுக்கிய கடைகள் சிறிய … Read more

’’அரசு நிலங்களை யாரும் ஆட்டைய போட விடமாட்டோம்’’ – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

’’அரசு நிலங்களை யாரும் ஆட்டைய போட விடமாட்டோம். தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்; இல்லையெனில் நானே நீதிமன்றம் செல்ல வேண்டியது இருக்கும்’’ என புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் சிசிடிவி கேமராவை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். அப்போது பேசிய சட்டதுறை அமைச்சர் ரகுபதி, ‘’அரசு புதிய நலத்திட்டங்களைக் கொண்டு வரும்போது அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களை தனி … Read more

#BigNews: கள்ளக்குறிச்சி வன்முறை வழக்கில் ஏற்ப்பட்ட திடீர் திருப்பம்..!

கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் … Read more

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த … Read more