தருமபுரி மாவட்டத்தில் 2வது நாளாக அன்புமணி ராமதாஸ் நடைபயணம்: ஏரி, குளங்களில் காவிரி உபரிநீரை நிரப்ப கோரிக்கை..!!
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 2வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி உபரிநீர் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களில் நிரப்பக்கோரி ஒகேனக்கல்லில் நேற்று அவர் நடைப்பயணத்தை தொடங்கினார். 2வது நாளாக குறும்பட்டி டீக்கடை என்ற இடத்தில் இருந்து நடைபயண பரப்புரையை தொடங்கினார். சோலைக்கொட்டாய், நடுபட்டி, ஒடசல்பட்டி, கடத்தூர், சில்லாரஹள்ளி, நத்தமேடு பேருந்து நிறுத்தம், ஜாலியூர் வரை … Read more