வந்தவாசி அருகே வகுப்பறைக்குள் மோதலில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் – வீடியோ

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்குள் மோதலில் ஈடுபடும் காட்சி வெளியாகியுள்ளது. தெள்ளார் பகுதியில் உள்ள ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்ற நிலையில், வணிகவியல் துறை மாணவர்களும், வேதியியல் துறை மாணவர்களும் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டனர். வகுப்பறைக்குள் நடந்த இந்த மோதல் சம்பவம் குறித்து அறிந்த பேராசிரியர்கள், மாணவர்களை அப்புறப்படுத்தினர். கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தொடர்பாக இரண்டு துறை மாணவர்கள் இடையே இருந்த … Read more

“ஆசிரியர்களை மதித்தால் உயரலாம்… நானே உதாரணம்” – மாணவர்களுக்கு அமைச்சர் கணேசன் அறிவுரை

கடலூர்: “மாணவரை முட்டிப் போட வைத்தால், ஆசிரியர் கோர்ட்டுக்கும் போகும் நிலை உள்ளது” என்று என்று வழிகாட்டி நிகழ்வில் சி.வெ.கணேசன் பேசினார். கடலூர் திருப்பாதிருப்புரியூர் புனித வளனார் பள்ளியில் இன்று நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு’ எனும் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசினார். கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கான நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் … Read more

`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து

“இந்தியாவில் சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்று ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட நாளும் ஒரு முக்கியமான தினம்” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் 5வது தேசிய ஜி.எஸ்.டி தின விழா, ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு – புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரிக்கான தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சௌத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பாக … Read more

சசிகலாவின் ரூ15 கோடி பினாமி சொத்துகள் முடக்கம் – வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை

சென்னையில் ஒரு நிறுவனம் சசிகலா பினாமி பெயரில் வாங்கப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமான வரித்துறையினர் 15 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த நிறுவனத்தை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரது தோழியான சசிகலாவுக்கும் சொந்தமான இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். வருமான வரித்துறையின் சோதனையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குபதிவு செய்தது. அதன்படி, சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகளை வருமான … Read more

#ஈரோடு || மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.!

ஈரோடு மாவட்டத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டம் தவட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(20). இவரது மனைவி திவ்யதர்ஷினி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தநிலையில் மணிகண்டன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு சிகுச்சைக்காக … Read more

தமிழகத்தின் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களிலும் நாளை நீலகிரி, தேனி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 50 கிலோ மீட்டர் வரை சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால் … Read more

கள்ளக்குறிச்சி | விசிலடித்து மாற்றுத் திறனாளிகள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி: 19 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே வாய்பேசாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகள் விசிலடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீத பணி வழங்கிடுதல், மாதாந்திர உதவி தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க கோருதல், ஆவின் பாலகம் அமைத்து தருதல், ஓட்டுநர் பயிற்சி முகாம் நடத்தக் கோருதல், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு … Read more

இந்தியாவிற்கு 5 ஜி தொழில்நுட்பம் தேவையா?

இந்தியாவில் 5 ஜி தொழில் நுட்பம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவில்  5ஜிக்கான தேவை குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. குறைந்த கட்டணத்தில் நெட்வெர் சேவை கிடக்கவும். அதேவேளையில் தரமான பேண்ட்  வித் (band width ) கிடைக்கவு, நல்ல வேகமாக நெட்வொர்க் கிடைக்கவும் 5 ஜி தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. கேஜட்ஸ் சந்தையில் 5 ஜி போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், கேஜட்ஸ் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் இதை வாங்க தொடங்கி … Read more

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் திடீர் திருப்பம்…! ஒரு கை பார்த்து விடலாம்… அடித்து களமிறங்கிய எடப்பாடி கே பழனிச்சாமி.!

பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு இடையே வருகின்ற ஜூலை 11 ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு முயற்சி செய்து கொண்டு வருகிறது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவெட் மனுவை தாக்கல் செய்துள்ள ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளது.  மேலும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழுக்கு … Read more

தனியாக வசித்து வந்த தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் கொள்ளை..! 140 சவரன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த 140 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவில் ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதிகளான அருணாச்சலம் மற்றும் ஜாய் சொர்ண தேவி தனியாக வசித்து வரும் நிலையில், நேற்றிரவு அவர்களது வீட்டிற்குள் புகுந்த மங்கி குல்லா அணிந்திருந்த 3 மர்ம நபர்கள், ஜாய் சொர்ண தேவியையும், … Read more