பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் – முடக்கிய வருமான வரித்துறை

பினாமி பெயரில் வாங்கியுள்ள சசிகலாவின் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரது தோழியான சசிகலாவுக்கும் சொந்தமான இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தனர். அந்த சோதனையின் முடிவில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குபதிவு செய்திருந்தது. அதன்பேரில் சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி வருகிறது. … Read more

இது சாப்பிட்டா கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.. அதுக்கு பதில் இந்த உணவுகளை சாப்பிடுங்க!

கொழுப்பு சத்து நமது உடலுக்கு தேவையான ஒன்று. இருப்பினும் ரத்ததில் கொழுப்பு சதவிகிதம் உயர்ந்தால், அது பல்வேறு நோய்களை உருவாக்கும். ஒரு வருக்கு கொலஸ்ட்ரால் இருந்தால், அவருக்கு இருதய ரத்த குழாய்கள் பாதிக்கும் நோய் வர வாய்ப்பிருக்கிறது. நமது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் மேலும் நமது வேலைகளில் ஏற்படும் மாற்றம் நமது ரத்தில் உள்ள கொழுப்பு அளவில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் சாப்பிடும் சில  உணவுகள் ரத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்கிறது.இந்நிலையில் நாம் சாப்பிடும் … Read more

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் கட்டாயம்.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ‌.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கு வருகை தரும் போது அனைவரும் … Read more

மாணவர்கள் தற்கொலை தொடரக்கூடாது; நீட் தேர்வுகு உடனடியாக விலக்கு பெறவும்: அன்புமணி

சென்னை: நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், அதன் மூலம் நீட் தேர்வுக்கு அஞ்சி நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் வரும் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். … Read more

‘என் உடல் இப்போது சரியாக இல்லை’: மோசமான ஹார்மோன் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதி ஹாசன், தான் மோசமான சில ஹார்மோன் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக, சமீபத்தில் சமூக ஊடகங்களில் கூறினார். அப்போது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) மற்றும் எண்டோமெட்ரியோசிஸுடனான தனது போராட்டத்தைப் பற்றி அவர் வெளிப்படுத்தினார் “என்னுடன் உடற்பயிற்சி செய்யுங்கள். எனது பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர்கொள்கிறேன் – சமநிலையின்மை, வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் இது ஒரு கடினமான போராட்டம் என்பதை பெண்கள் அறிவார்கள். ஆனால் அதை ஒரு … Read more

#BigBreaking || தமிழக அரசுக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.! சற்றுமுன் இடைக்கால தடை உத்தரவு….!

முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது, இதை ஏற்க முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு … Read more

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் பள்ளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டுமெனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Source link

ட்விட்டரில் தனது கட்சிப் பொறுப்பை மாற்றிய எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் எந்த முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கட்சியினுடைய பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் என்று கட்சியின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் கடந்த வாரம் … Read more

Tamil news today live: ட்விட்டரில் அதிமுக பொறுப்பை மாற்றிய இபிஎஸ்

Go to Live Updates பெட்ரோல் – டீசல் விலை சென்னையில் 40 -வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பான் – ஆதார் இணைக்காவிடில் இன்று முதல் அபராதம் பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் இன்று முதல் ₨1,000 அபராதம் வசூலிக்கப்படும்.  பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி … Read more

சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது.!

சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக முழுவதும் போதை மாத்திரை கலாச்சாரத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பல்லாவரம் தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூன்று பேரை போலீசார் விசாரணை செய்தனர். … Read more