டாஸ்மாக் போல வருமானம் தந்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் தருவதாக இருந்தால், வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் பரப்புக்கு அந்நிய மரங்கள் … Read more

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி53; மூன்று சிங்கப்பூர் செயற்கைகோள்களை நிலைநிறுத்தியது இஸ்ரோ

Anonna Dutt  Isro places 3 Singapore satellites, 6 experiments in orbit in second launch this year: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வியாழன் அன்று நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் வணிகப் பணியில் மூன்று சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோவின் இந்த ஆண்டின் இரண்டாவது ஏவுதல் இதுவாகும், முன்னதாக இஸ்ரோ பிப்ரவரியில் இந்திய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. வணிக செயற்கைக்கோள்களுடன், இஸ்ரோ நிறுவனம் தற்போதைய … Read more

மதுரை.! நடத்தை சந்தேகத்தில் மனைவியை அடித்து கொன்ற கணவர்.!

மதுரை மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் அடித்து கொன்றுள்ளார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி முருகம்பாள்(40). இவர்கள் இருவரும் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். ஆனால் கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் இன்று … Read more

“உயர்கல்வி உதவித்தொகைக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்” – தமிழக அரசு

உயர்கல்வி உறுதித் திட்டத்தில் உதவித் தொகை பெற மாணவியர் விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஜூலை 10 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. பல்தொழில்நுட்பம், கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவியர் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற அரசின் இணையத்தளத்தில் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடுவை மேலும் பத்து நாள் நீட்டித்துள்ளதுடன், இது குறித்த தெளிவுரைகளை 14417 என்கிற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் … Read more

மதுரை திருப்பரங்குன்றத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவின் பின்புறமுள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர்நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இதனைப் பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயக்குமார், முத்துபாண்டி, முருகன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டை வாசித்து இவ்விளக்கத்தை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறியதாவது: அரிட்ட நேமிபடாரர் என்னும் சமணத்துறவி சல்லேகனை என கூறப்படும் வடக்கிருந்து … Read more

கழிவு நீரில் தயாரிக்கப்பட்ட சிங்கப்பூர் பீர்; உணவு பஞ்சம் குறித்து ஐ.நா எச்சரிக்கை… உலகச் செய்திகள்

Global food shortage crisis, Singapore sewage water used beer today world news: இன்று உலக நாடுகளில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். முதல் பெண் கறுப்பின நீதிபதி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண்மணியாக, உச்ச நீதிமன்றத்தில் கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பதவியேற்றார். 51 வயதான ஜாக்சன் நீதிமன்றத்தின் 116 வது நீதிபதி ஆவார். நீதிபதி ஸ்டீபன் பிரேயரின் ஓய்வு நண்பகல் முதல் அமலுக்கு வந்த நிலையில், அவரது இடத்தில் … Read more

#திருப்பூர் || ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!

ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபராகவும், பைனான்ஸியராகவும் இருந்து வந்தார். இவரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது பெற்றோர் கோவிலுக்கு சென்றதால் பாலசுப்பிரமணி தனியாக இருந்துள்ளார். நள்ளிரவு வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் அவரை பாலசுப்பிரமணியை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். … Read more

டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால்தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? : அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? எனத் தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் வினவியுள்ளது. காடுகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற 5 கோடியே 36 இலட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், ரசாயன முறைப்படி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்நிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் அழிவதை ஒப்புக் கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதைத் தவிர வேறு என்ன செய்துள்ளது? என நீதிபதிகள் வினவினர். அந்நிய மரங்களால் … Read more

திருப்பூர் மசூதி விவகாரம் | “ஐகோர்ட் உத்தரவை மீறிய திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுங்கள்” – தமிழக பாஜக

சென்னை: திருப்பூர் மசூதி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட திருப்பூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருப்பூரில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்த மசூதியை மூட வேண்டும்; அங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் அடிப்படையில், வருவாய்த் துறை … Read more

’தேர்தலை முதலில் இருந்து நடத்துங்க’ – புதிய வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு

அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த எஸ்.சூரிய மூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ”அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு, முறையாக தேர்தல் நடைமுறைகளை கையாளாமல் … Read more