மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றம் செய்து திமுக அரசியல் செய்கிறது – அண்ணாமலை

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் திமுக பெயர் மாற்றம் செய்து, அரசியல் செய்து வருகிறது என பொள்ளாச்சியில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். பொள்ளாச்சியில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பேசும்போது, மத்திய பாஜக 8 ஆண்டு கால ஆட்சியில் மக்களும், பெண் சமுதாயத்தினரும் தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.  திமுக ஆட்சியின் ஒரு … Read more

TN HSC Plus 2 Results LIVE: இன்று காலை பிளஸ் 2 ரிசல்ட்

Go to Live Updates தமிழகத்தில்  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 17ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுடன் சேர்த்து இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தகவல் மையங்களிலும், அனைத்து நூலகங்களிலும் … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (20.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை மொத்த காய்கள் வியாபாரம் கோயம்பேடு மார்க்கெட் 20/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 24/22/20 நவீன் தக்காளி 40 நாட்டு தக்காளி 30/28 உருளை 36/33/24 சின்ன வெங்காயம் 35/30/25 ஊட்டி கேரட் 40/35/32 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 65/60/55 பீட்ரூட். ஊட்டி /48.45 கர்நாடக பீட்ரூட் 35/30 சவ் சவ் 18/16 முள்ளங்கி 15/12 முட்டை கோஸ் 40/30 வெண்டைக்காய் 30/25 உஜாலா கத்திரிக்காய் … Read more

மனைவிக்கு வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்த கணவர்.. தாய், சேய் உயிரிழந்ததால் கணவர் கைது..!

சேலத்தில் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்து, அதில் உயிரிழந்த தாயையும், சிசுவையும் புதைத்தவரை போலீசார் கைது செய்தனர். தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பார்வதி, அஜித்குமார் தம்பதிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், 4-வதாக பார்வதி கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணி பார்வதிக்கு பேருகால வலி ஏற்பட்ட நிலையில், வீட்டில் வைத்தே கணவர் அஜித்குமார் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. தம்பதிக்கு இறந்தே பெண் சிசு பிறந்ததாகவும், சிறிது நேரத்தில் வலிப்பு ஏற்பட்டு பார்வதியும் இறந்ததாக கூறப்படுகிறது. பார்வதி உடலையும் … Read more

பொறியியல் கலந்தாய்வு: ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில், பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் இன்று (ஜூன் 20) காலை தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூலை 19ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 20 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ஜூலை 22ல் ரேண்டம் எண் வெளியிடப்படும். ஆகஸ்ட் 8ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14 வரை ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும். இன்று … Read more

மதுரை: தாயை பயமுறுத்த நினைத்த மகனுக்கு நடந்த விபரீதம்

தாயை பயமுறுத்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர், தாயின் கண்முன்னே உயிரிழந்தார். மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள AIBEA காலனி 4-வது தெருவைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் அழகர்சாமி என்பவரின் மகன் சரவண விஷால் (23). இவர், கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டிலேயே தனது தாயுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது தாயை பயமுறுத்த நினைத்த சரவண விஷால் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்வதாகக்கூறி அவரது தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து … Read more

அ.தி.மு.க பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்: லேட்டஸ்ட் நிகழ்வுகள்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மோதல் முற்றிவரும் நிலையில், ஜூன் 23 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவாதம் எழுந்ததில் இருந்து கடந்த 6 நாட்களாக தமிழக அரசியல் களம் ஒரே பரப்பாக இருந்து வருகிறது. பொதுக்குழுவுக்கு முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதே … Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடக்கம்.!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவ – மாணவிகள் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.  இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளங்கலை சேருவதற்கான விண்ணப்ப பதிவு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் துவங்கியுள்ளது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதற்காக மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் என்ற அடிப்படையில் … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 20, 21-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22, 23-ம் தேதிகளில் வட தமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். … Read more

திருவள்ளூர்: அரசு பேருந்துக்குள் மழைநீர் கொட்டியதால் பயணிகள் அவதி

திருவள்ளூரில் இருந்து பென்னாலூர் பேட்டை செல்லும் அரசு பேருந்துக்குள் மழைநீர் கொட்டியதால் பயணிகள் அவதியடைந்தனர். திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் திடீரென கனமழை பெய்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் இருந்து பென்னாலூர் பேட்டை கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பெய்த கன மழையால் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து அதன் ஓட்டை வழியாக மழைநீர் கொட்டியது. இதனால் இருக்கையில் அமர முடியாமல் தவித்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். திருவள்ளூரில் இருந்து பென்னாலூர் … Read more