சிறையில் இருந்து ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதான சந்தோஷ்குமார் என்பவர் கொலை வழக்கில் இரண்டு மாதம் சிறையில் இருந்துவிட்டு கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தார். இன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைத்தெருவிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Source link