திருச்சி | தமிழ் பிராமி எழுத்துகளில் 1,330 குறட்பாக்களை கையால் எழுதி வெளியிட்ட தமிழாசிரியர்: பல்வேறு தமிழ் அமைப்பினர் பாராட்டு
திருச்சி: திருச்சியைச் சேர்ந்த தமிழாசிரியர் ஒருவர் தமிழ் பிராமி எழுத்துகளில் 1330 குறட்பாக்களை கையால் எழுதி அச்சிட்டு அதை நூலாக வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவ.சற்குணன். தற்போது திருச்சியில் வசித்து வரும்இவர், தமிழில் முனைவர் பட்டம்,திருக்குறள் புலமையர் பட்டம், ஓலைச்சுவடியியல், கல்வெட்டியியல் பட்டயம், சமஸ்கிருதத்தில் பட்டயம் பெற்றுள்ளார். பட்டதாரி ஆசிரியர், முதுநிலைதமிழாசிரியர் மற்றும் தலைமையாசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது திருச்சி முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி … Read more