யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பு

Poonamalle court refused to give police custody to Youtuber Karthik gopinath: அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் பெயரை பயன்படுத்தி, பல லட்சம் வசூலித்த புகாரில் பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைக்கப் போவதாக கூறி, யூடியூபர் கார்த்திக் கோபிநாத் இணைய தளம் மூலம் … Read more

உயர் மின்னழுத்த ஒயர்கள் மீது கண்டெய்னர் லாரி உரசி தீவிபத்து.. ரூ.50லட்சம் மதிப்பிலான டயர்கள் தீயில் எரிந்து நாசம்..!

திருவள்ளூர் அருகே உயர் மின்னழுத்த ஒயர்கள் மீது கண்டெய்னர் லாரி உரசி தீப்பிடித்ததில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசமாயின. மணவாளநகரில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்ஆர்எப் டயர்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்தது. கேட்டர்பில்லர் கம்பெனி அருகே சாலையோரத்தில் இருந்த உயரழுத்த மின்சார வயர்கள் உரசியதில் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தீயணைப்புத்துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தபோதும் லாரியின் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை/ உதகை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி, கோவை, சேலம், வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கில் காற்றின் திசை மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனால், ஜூன் 3, 4-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, … Read more

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி புகார்: தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படையினர்!

ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் முப்பதாயிரம் ரூபாய் வழங்குவதாக மோசடி செய்த புகாரில், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன நிர்வாகிகளை பிடிக்க ஏழு டிஎஸ்பிக்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக கடந்த 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் … Read more

வீட்டில் இட்லி மாவு இருக்கா? 10 நிமிடத்தில் பக்கோடா ரெடி

இன்றைய கால கட்டத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. மாலை நேரத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பிகிறார்கள். சாப்பிட வெளியே வாங்குவற்கு பதிலால, வீட்டிலே செஞ்சு சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும். ஈஸியாக, வீட்டில் இட்லி, தோசைக்கு வைத்திருக்கும் மாவிலே, 10 நிமிடத்தில் பக்கோடாவை ரெடி செய்துவிடலாம். அதற்கான செய்முறையை இங்கே காணலாம். தேவையான பொருள்கள் இட்லி மாவு 1 கப் 2 நீளமாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை மல்லியிலை பச்சை … Read more

ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. கொலை செய்யப்பட்டாரா என காவல்துறை விசாரணை.. திருவள்ளூர் அருகே பரபரப்பு..!

இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், புங்கத்தூர் பகுதியை சேர்ந்த பூவரசன் ( வயது 24). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் மைத்துனர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை சாலையில் ரத்த வெள்ளத்தில் … Read more

அரிவாள், வாளுடன் பைக்குகளில் வலம் வரும் மர்ம கும்பலால் மக்கள் பீதி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரிவாள், வாளுடன் பைக்குகளில் உலா வரும் கும்பலால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வீரவநல்லூர் மெயின்ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கிற்கு நேற்றிரவு 2 பைக்குகளில் கையில் மதுபாட்டில்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் போட்டுள்ளது. அப்போது திடீரென அவர்களில் ஒருவர் பங்க் ஊழியரை தனது காலால் மிதித்து உதைத்தும், அடித்தும் சென்ற காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த கும்பல் சேரன்மகாதேவியிலுள்ள … Read more

மக்களுக்கு பயன் அளிக்கும் புதிய யுக்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும் – அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: புதிய யுக்திகள் மக்களுக்கு பயன் அளிக்கும் என்றால் அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுத் துறைகளின் செயலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் அரசு திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலை உள்ளிட்டவை தொடர்பாக துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஆய்வு நடத்தினார். நேற்று நடந்த 2-ம் நாள் ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்றபோது கரோனா தொற்று, வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் மோசமான நிதி … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் அடையாறு, மத்திய கைலாஷ், அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகன போக்குவரத்தில்  மாற்றங்கள் சோதனை அடிப்படையில் வரும் நாளை (ஜூன் 04) முதல் 10 நாட்களுக்கு அமல்படுத்தப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பழைய மகாபலிபுரம் … Read more

மதுபோதையில் தகராறு.. லாரி ஏற்றி கொன்ற வடமாநில டிரைவர்.. சென்னை அருகே பரபரப்பு..!

மதுபோதையில் தகராறு செய்தவர்கள் மீது ஓட்டுநர் லாரி ஏற்றிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், வடபெரும்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான லாரி பார்க்கிங் யார்டு செயல்பட்டு வருகிறது. அங்கு கமலக்கண்ணன் (36) குமரன் (34) நவீன் (25) ஆகிய மூவரும் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது, வடமாநில லாரி டிரைவர் லாரியை எடுக்க முயற்சி செய்துள்ளார். அதனால், அவர்களுக்கும் லாரி டிரைவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. போதையில் இருந்த அவர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதில், கோபமடைந்த லாரி … Read more