ரூ.2,877 கோடி.. ஐடிஐ நிறுவனங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயா்த்தும் திட்டம்!
ரூ.2,877 கோடியில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை, தொழில்நுட்ப மையங்களாக தரம் உயா்த்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு: தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் திறன் மேம்பாடு அவசியம். தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாநிலத்தில் உள்ள 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப திறன்பெற்ற தொழிலாளர்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டு தொழிலாளர் துறை மானியக் … Read more