கெடு விதித்த மத்திய அரசு; மவுனம் காக்கும் தமிழக அரசு – குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு உண்டா? இல்லையா?

நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய என மத்திய அரசு கெடு விதித்துள்ள நிலையில், தமிழக அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, நிகழாண்டு குறுவைக்கு பயிர்க் காப்பீடு உண்டா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனடெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை,சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன்படி, டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு நிகழாண்டு 5.20 லட்சம் ஏக்கர் … Read more

தமிழக அரசு ராக்கெட்ரி படத்தை பள்ளி கல்லூரிகளில் திரையிட வேண்டும் – வானதி சீனிவாசன்

தமிழக அரசு ராக்கெட்ரி திரைப்படத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டுக் காண்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில் ராக்கெட்ரி திரைப்படத்தை பார்த்த பின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டியளித்;தார் அப்போது… நாட்டிற்கு எப்படிப்பட்ட ஒரு நல்ல தலைமை தேவை என்பதை ராக்கெட்ரி படம் உணர்த்துகிறது. நம்பி நாராயணன் விஷயத்தில் என்ன நடந்திருக்கிறது என்பது படத்தைப் பார்த்தால் தெரிகிறது. தன்னலம் கருதாமல் நாட்டிற்காக உழைக்கும் நம்பி நாராயணன் போன்றவர்களின் வாழ்க்கை … Read more

Today Gold rate: அதிரடியாக குறைந்த வெள்ளி, தங்கம் விலை..!

உலகளாவிய சந்தை நிலவரம், அமெரிக்க வங்கிகளின் வட்டி வீதம் உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்ப சரிவு என பல்வேறு காரணிகளால் தங்கம் விலை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சற்று சரிந்து காணப்படுகிறது.இந்த நிலையில் இன்று (ஜுலை 19) தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 சரிந்து ரூ.4, 658ஆக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.37, 264 ஆக உள்ளது.24 காரட் தூய … Read more

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைப்பு.. இன்றைய விலை நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4688 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 37504-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆஜராக சம்மன்: போலீஸார் இன்றும், நாளையும் விசாரணை

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராயப்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி, இன்றும், நாளையும் விசாரணை நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு கூடியிருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் … Read more

மாணவிக்கு சாக்லெட் கொடுத்த மாணவன்: நிர்வாகத்தினர் கண்டித்ததால் தற்கொலை முயற்சி

காஞ்சிபுரம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவன் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு பகுதியில் பிரபல தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஈசிகாந்த் இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இந்த மாணவன் தன்னுடன் … Read more

அதிர்ச்சி! தமிழக பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு வெளிமாநிலத்தவர்!!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1,060 விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. கணினி வழி தேர்வாக கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய தேர்வர்களில் விகிதாச்சார அடிப்படையில் 2 ஆயிரத்து 148 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பில் தமிழக தேர்வர்களைத் தவிர வெளிமாநிலத்தைச் சேர்ந்த … Read more

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி; சான்றிதழ் சரிபார்ப்பில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பு: தமிழக பட்டதாரிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்றுள்ளதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு டிச.8 முதல் 13-ம்தேதி வரை கணினி வழி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,148 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த … Read more

திருவாரூர்: வேலையில்லாத விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

சரியான வேலை கிடைக்கவில்லை என மன உளைச்சலில் இருந்த முதுகலை பட்டதாரி இளைஞர், பேருந்து நிலைய கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கீழ உத்தரங்குடி பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் சுரேஷ்குமார் (35) இவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியாற்றி வந்தார், இந்நிலையில், படிப்பிற்கு … Read more

தமிழகத்தில் ஜூலை 26 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் … Read more