வெளிநாட்டில் இருந்து தமிழக கோவில்களைச் சேர்ந்த 10 சிலைகள் மீட்பு.!
வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட தமிழக கோவில்களை சேர்ந்த 10 சிலைகளை டெல்லியில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார். தமிழக கோவில்களில் இருந்து களவாடப்பட்ட விலை மதிப்பற்ற 10 புராதன உலோக மற்றும் கற்சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியாக நாட்டு அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி ஆகியோர் பங்கேற்றனர். … Read more