பீட்ரூட், பூண்டு… பி.பி அதிகம் இருக்கிறவங்க இந்த 4 உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!

நம்மில் பலர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்போம். மேலும் உயர் ரத்த அழுத்தத்தை மாத்திரைகளால் மட்டும் கட்டுப்படுத்திவிடலாம் என்று யோசிப்போம். ஆனால் நம் வாழ்க்கை முறையில் செய்துகொள்ளும் மாற்றங்கள் மற்றும் உணவு முறையில் செய்யப்படும் மாற்றம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக இந்த 4 உணவுகளை தவறாமல் சாப்பிடுவது அவசியம். கீரை வைகள்: கேல் கீரை, லெட்யூஸ் போன்ற கீரை வகைகளில் பொட்டாஷியம், மான்கனிஸ், கால்ஷியம் , ஆன்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதில் இருக்கும் … Read more

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்.. பொதுமக்கள் கடலில் இறங்க தடை.!

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்களுக்கு கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.  இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன் … Read more

சத்தியமங்கலம் அருகே கரும்புத் துண்டுகளை ருசிக்க குட்டியுடன் உலாவந்த காட்டு யானை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் மலைப்பகுதி சாலையில் குட்டியுடன் கரும்புத் துண்டுகள் சாப்பிடும் யானையால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில்  ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் அருகே  நேற்றிரவு காட்டு யானை ஒன்று குட்டியுடன்  உலா வந்தது. அப்போது சாலையில் கிடந்த கரும்புத்துண்டுகளை கண்டதும் அவை இரண்டும் அதை எடுத்து ருசித்தபடி தின்றன. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்தி அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.  … Read more

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க மாட்டு வண்டிகளில் வந்த கிராம மக்கள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க, தோகைமலை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்தனர். கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த காரணாம்பட்டி, காவல்காரன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு மாட்டு வண்டிகளில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி ரங்கநாதரை தரிசிப்பது வழக்கம். அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு கோயிலுக்கு வந்தனர். இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டுக்குப் பதிலாக, நேற்றுமுன்தினம் 100-க்கும் மேற்பட்ட மாட்டு … Read more

`சமூகநீதியின் ஹீரோ மோடிதான்! ஸ்டாலினுக்கு அதுபற்றி பேச தகுதியே இல்லை’- எல்.முருகன் கருத்து

“தமிழகத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு முக்கிய இலாகா கொடுக்கப்படவில்லை. ஆனால் தானே சமூக நீதி காவலர் என முதலமைச்சர் கூறிக்கொள்கிறார். உண்மையில், சமூக நீதி பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் கிடையாது” என என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த … Read more

Eyes health: உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும் கண்கள்!

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அல்சைமர் நோய் மற்றும் பிற நரம்பியல் நிலைகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியும் ஸ்மார்ட்போன் செயலியை உருவாக்கியுள்ளனர். கருவிழியில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க, ஃபோனின் அருகிலுள்ள இன்ஃபிரா ரெட் கேமராவை இந்த ஆப் பயன்படுத்துகிறது. மற்ற உடல் பாகங்களை விட கண்ணுக்கு மிகவும் குறைவான பரிசோதனை முறைகள் தேவைப்படுகின்றன. எனவே, தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் போது, ​​கண்கள்’ அனைத்து வகையான நோய்கள் மற்றும் நிலைமைகளைக் கண்டறிவதற்கான வழிமுறையாக மேலும் மேலும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் தொழில்நுட்பம் … Read more

திருவள்ளூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி கிடந்த நபர்.!

திருவள்ளூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தூக்கில் தூங்கிக் கிடந்த நபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசநல்லாத்தூர் கிராமத்தில் பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கடம்பத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பூட்டி கிடந்த வீட்டை உடைத்து உள்ளே … Read more

தமிழ்நாட்டில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்!

தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில், கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா பரவத் துவங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்களை, உருமாறிய கொரோனா அதிகம் தாக்கும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது.தடுப்பூசி போடாத ஒரு கோடி 63 லட்சம் பேரை கண்டுபிடித்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில், மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. மேலும், முன்கள பணியாளர்கள் மற்றும் … Read more

குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது சமூக குற்றம் – குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதல்வர் கருத்து

சென்னை: சொற்பத் தொகைக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தீவிர சமூக குற்றம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பட்டாம்பூச்சிகள்போல சிறகடித்துப் பறந்து மகிழும் குழந்தைப் பருவத்தில், பள்ளிக்குச் சென்று துள்ளி விளையாடவும், கல்வி பயிலவும், உடன் பயிலும் மாணவர்களோடு கதை பேசிக்களிக்கவும் முடிந்தால்தான் குழந்தைப் பருவம் முற்றுப்பெறும். குழந்தைகளுக்கு அநீதி குழந்தைப் பருவத்திலேயே அவர்களை வேலைக்கு … Read more