மனைவியை இழந்து மனவேதனையில் இருந்த கணவன், மகள் தூக்கிட்டு தற்கொலை.!

வேலூரில் மனைவியை இழந்து மனவேதனையில் இருந்த கணவன், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வேலூர் விருதம்பட்டு அருகே டி.கே.புரம் பகுதியை சேர்ந்த தினகரன் மின்வாரியத்தில் பணி புரிந்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. மூத்தமகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்.  இந்நிலையில் இவருடைய மனைவி கடந்த வருடம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மனைவியின் இறப்பு தினகரனுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி வந்த நிலையில், ஏற்கனவே ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் நேற்று இரவு தினகரனும், … Read more

புதிய கல்விக் கொள்கையை படித்து புரிந்த பிறகு தான் அதனை எதிர்க்கிறோம் – அமைச்சர் பொன்முடி

புதிய கல்விக் கொள்கையை பலரும் படிக்காமல் எதிர்த்து வருவதாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்த நிலையில், அதனை ஆழ்ந்து படித்து விட்டு தான் தாங்கள் கருத்து தெரிவிப்பதாக அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார். சென்னை நந்தனம் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றப்பின் பேட்டியளித்த அவர், வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநர் நேற்று பேசியதாகவும், அதன்படி மாநில அரசின் கருத்துக்களுக்கு அவர் உரிய முக்கியத்துவம் அளிப்பார் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். Source link

'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து மாநில வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது' – ஓபிஎஸ்

சென்னை: “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, அதன் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. சூதாட்டம், சாராயம், போதை, கடத்தல், பதுக்கல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்றால், அதற்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சட்டம்-ஒழுங்கு. ஒரு மாநிலத்தில் சட்டம் … Read more

தபால் துறையில் 38,926 காலியிடங்கள்; தேர்வு இல்லாமல் வேலை: இன்னும் சில நாள் மட்டுமே அவகாசம்

India post recruitment 2022 for 38926 GDS posts how to apply details: போஸ்ட் ஆபிஸ் ஜி.டி.எஸ் பணிக்கு விண்ணபிக்க இன்னும் 5 நாட்களே அவகாசம் உள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்த வேலைக்கான தகுதிகள், விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் … Read more

பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி தீப்பிடித்து விபத்து.. கூலித் தொழிலாளி படுகாயம்.!

பெரும்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பைக் தீப்பிடித்து எரிந்தது, இதில் தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் வர்கீஸ். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயமேரி அப்பதான் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக வர்கீஸ் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பெரும்பாறைக்கு சென்றுள்ளார். அப்போது மூலக்கடை-புல்லாவெளி பகுதியில் வந்தபோது அந்த வழியாக எதிரே வந்த தனியார் … Read more

தமிழ் வழியில் கல்வி கற்ற பெண் பட்டதாரி யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற பெண் பட்டதாரி ஒருவர் UPSC தேர்வில் 338வது இடம் பிடித்துள்ளார். மைக்கேல்பட்டி கிராமத்தில் பள்ளிக்கு செல்லாத தந்தை, ஆரம்ப கல்வியை நிறைவு செய்யாத தாயாருக்கு மகளாகப் பிறந்தவர் ஏஞ்சலின் ரெனிட்டா. சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் வேளாண் பொறியியலில் தங்கப்பதக்கம் பெற்றவரான ரெனிட்டா, UPSC தேர்வில் தேசிய அளவில் 338வது இடம் பிடித்தார். விரைவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக இருக்கும் ரெனிட்டாவிற்கு மைக்கேல்பட்டி கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.   … Read more

திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூரில் வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருப்பதி கோயிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோயிலில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு இன்று (மே 31) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” திருச்செந்தூர் கோயிலில் ரூ.200 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். திருச்செந்தூர் கோயிலுக்கு நாளுக்குநாள் பக்தர்கள் வருகை … Read more

கோபியை வெளியில் தள்ளிய ராதிகா… அடுத்த கட்டத்திற்கு நகரும் பாக்யலட்சுமி

Tamil Serial Baakiyalakshmi Rating Update : திருமணத்திற்கு மீறிய உறவு வைத்துக்கொண்டால் கடைசியில் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்பதற்கு பாக்யலட்சுமி சீரியல் ஒரு பெரிய உதாரணம். ஆன இதை இவ்வளவு இழுவையா சொல்லிருக்க கூடாது என்று புலம்ப வைத்துள்ள சீரியல். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலானா பாக்யலட்சுமி சீரியலில் கோபி தனது மனைவி பாக்யாவுக்கு தெரியாமல் முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள நினைத்து அதற்கான முயற்சியில் இறங்க, மகா சங்கமத்திற்கு வந்த … Read more

சாலையில் குளித்து துணி துவைத்து கொந்தளித்த டெரர் பாய்ஸ்..! தாமிரபரணி குடிநீர் குழாயில் ஓட்டை

தாமிரபரணி கூட்டுகுடி நீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாவதை தடுக்க கோரி சாலையில் தேங்கிய நீரில் இரு இளைஞர்கள் துணி துவைத்து குளித்து ஓட்டையை அடைக்க நூதனமாக வலியுறுத்தி உள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டை – சங்கரண்கோவில் இடையே அமைந்துள்ளது சேர்ந்தமரம் கிராமம், இந்த கிராமத்தின் வழியாக வாசுதேவ நல்லூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டுகுடி நீர் திட்ட குழாய் செல்கிறது. இந்த குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடி தண்ணீர் வீணாகி சேர்ந்தமரம் … Read more

புதுவையில் புதிய மதுபான ஆலைகளுக்கு ஆளுநர் அனுமதி அளிக்கக் கூடாது: அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: “புதுச்சேரியில் புதிய மதுபானத் தொழிற்சாலைகளுக்கு துணை நிலை ஆளுநர் அனுமதித் தரக்கூடாது; மீறி, தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சித்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என அம்மாநிலத்தில் கூட்டணிக் கட்சியான அதிமுக கூறியுள்ளது. இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக துணை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வையாபுரி மணிகண்டன் கூறியது: “புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் மதுபான தொழிற்சாலைகள், ரசாயன ஆலைகளால் நாள்தோறும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர் … Read more