வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா நகல் பெற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது.!
திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா நகல் பெற 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைதுசெய்தனர். ஆசூரை சேர்ந்த கலைமணி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாவை கிராம கணக்கு மற்றும் வட்ட கணக்கில் திருத்தம் செய்ய அவரது மகன் யுவராஜ் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அங்கு எழுத்தராக உள்ள சிவஞான வேலு பதிவேடுகளை எடுத்து கொடுக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு … Read more