தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்.. மருத்துவரை கைது செய்த போலீசார்..!

சேலம் அருகே தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை Deayhஉறவினர்கள் அடித்து நொறுக்கினர். சேலம் மாவட்டம் சவுரியூரை சேர்ந்த பெண் ஒருவர், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக எடப்பாடியில் உள்ள அரவிந்த்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, மருத்துவர் தவறான சிகிச்சையளித்து பின்னர் அதனை சரிசெய்ய 3 முறை அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அஜீரண கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தவறான சிகிச்சையளித்த மருத்துவரை … Read more

குட்கா கடத்தலைத் தடுப்பதில் சவால்கள் என்னென்ன? – மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: “அண்டை மாநிலமான கர்நாடகாவில் குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை இல்லாததால், அங்கிருந்து இதுபோன்ற போதைப்பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று (மே 31) சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இதில் … Read more

பழங்குடியினோர் அடிப்படை வசதி மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அரசாணை

பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ. 17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டிருக்கும் அரசாணையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல், பள்ளிகள் பராமரிப்பு, மேம்படுத்துதல் போன்ற … Read more

தேர்வு கடினம்… பட்டுக்கோட்டை 10-ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு!

எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சரிவர தேர்வு  எழுதவில்லை என்ற மன உளைச்சலில் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியைச்  சேர்ந்த  மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை  சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்த  சூர்யா பாண்டி என்பவரது மகள் யோகேஸ்வரி. இவர் இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார், நேற்று பள்ளியில் சமூக அறிவியல் பொதுத்தேர்வு  எழுதிவிட்டு மாலை  4 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.  … Read more

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4785 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38280-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. பெண் உட்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காரும்- தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட கார், ஆயில்பட்டியில் முன் சென்ற காரை முந்த முயன்ற போது எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதோடு, பேருந்தும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்தவர், கல்லூரி மாணவிகள் என … Read more

தமிழக அரசு பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வலியுறுத்தி சென்னையில் பாஜகவினர் பேரணி

சென்னை: பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் டீசல் விலையைப் பொருத்தவரை கடந்த மே 21-ம் தேதி, நாடு முழுவதும் பெட்ரோல் மீதான கலால் வரியை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் பல்வேறு தரப்பிலும் … Read more

வேலூர்: மனைவி உயிரிழந்த சோகம்: மகளுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுக்கு முன்பு உயிரிழந்த மனைவி, வேதனையில் மகளுடன் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் தினகரன் (52) இவரது மனைவி சிவக்குமாரி புற்றுநோய் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். மனைவியை இழந்த தினகரன் வேதனையிலும், மிகுந்த மன அழுத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு … Read more

இரவு வானில் விண்மீன்களை பார்த்து ரசிக்க 5 ஸ்டார்கேஸிங் ஆப்ஸ்!

இரவு வானத்தை, அதன் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரபஞ்சத்தைப் பார்ப்பதில் ஏதோ ஒரு உற்சாகம் இருக்கிறது. தொழில்நுட்பத்தின் உதவியால், இரவு வானத்தில் விண்மீன்கள் எங்கு உள்ளன என்பதைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் உங்களை அனுமதிக்கும் பல நட்சத்திரங்களைப் பார்க்கும் ஆப்ஸ் உள்ளன. இங்கே, நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில சிறந்த நட்சத்திர ஆப்ஸ் (stargazing apps) பட்டியலை நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம். கூகுள் ஸ்கை கூகுள் மேப்ஸின் நட்சத்திர அனலாக் தான் கூகுள் ஸ்கை. கூகுள் ஸ்கை மூலம், ஹப்பிள் ஸ்பேஸ் … Read more

கேரள லாட்டரியில்.. தமிழக டாக்டருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ரூ.10 கோடி பரிசு.!

கேரளா லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்த டாக்டருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் பிரதீப்குமார் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் என்பவரும் கடந்த மே 15ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த தங்கள் உறவினரை அழைப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது அங்கு விற்பனையான விஷு பம்பர் லாட்டரியை ஏஜெண்டு ஒருவரிடமிருந்து அவர்கள் வாங்கியுள்ளனர். தற்போது அந்த லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த லாட்டரி … Read more