ரயில் நிலையத்தில் பேண்டு வாத்தியங்களுடன் அட்டகாசம்.. ரூட்டு தலைகள் 7 பேரை கைது செய்தது போலீஸ்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பேண்டு வாத்தியங்களுடன் அட்டகாசம் செய்ததோடு, தட்டிக் கேட்ட காவலரை தாக்கிய 7 அரசு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரியின் ஆண்டுவிழாவை ஒட்டி, அக்கல்லூரியில் பயிலும் கும்மிடிப்பூண்டி ரூட்டு மாணவர்கள் சிலர், ரயில் நிலையத்தில் பேண்டு வாத்தியங்களுடன் குத்தாட்டம் போட்டு அட்டகாசம் செய்துள்ளனர். அவர்கள் ரயில் நிலையத்தில் சரவெடி வெடித்ததாக கூறப்படும் நிலையில், இதனை தட்டிக் கேட்ட ரயில்வே காவலரை மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளனர். … Read more