உக்ரைனுக்கு அளிக்கப்படும் நேட்டோவின் ஆதரவை ஒருபோதும் உடைக்க முடியாது.! ஸ்பெயின் பிரதமர்.!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான போர் மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து  வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு, ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகள் பொருளாதாரத்திலும், ஆயுத தேவைகளிலும் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனுக்காண நேட்டோவின் ஆதரவை ஒரு போதும் உடைக்க முடியாது என ஸ்பெயின் நாட்டின் பிரதமர் சான்செஸ் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் அப்பாவி மக்களின் மரணங்கள் என சர்வதேச சட்டத்தை மீறும் ரஷ்ய அதிபர் புதின் செயலை கண்டிக்க கட்டாயப்படுத்துவதாக அறிவித்துள்ளார். … Read more

கணக்கில் விழுந்த ரூ.13 கோடிப் பணம்.. உடனடியாக மேலாளருக்குத் தெரிவித்த வாடிக்கையாளர்.. பொதுப்பணம் என்பதால் நேர்மையாகச் செயல்பட்டதாக பேட்டி..!

சென்னையில் எச்டிஎப்சி வங்கியில் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகளில் திடீரென 13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்து மீண்டும் கணக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் கணினி விற்பனை நிறுவனம் வைத்துள்ள முகமது அலி என்பவர் கணக்கில் 13 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததை அடுத்த உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் தொடர்பு மேலாளருக்குக் கூறியதாகவும், அது பொதுமக்களின் பணம் என்பதால் நேர்மையாகச் செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். Source link

தஞ்சாவூரில் சிறப்பு தூர்வாரும் பணிகள் – தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி இந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளுக்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 683 பணிகள், 4 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,356 … Read more

கணவனை கொலைசெய்து புதைத்த மனைவி – 9 மாதத்திற்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடு

திருமணத்தை மீறிய உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனை மனைவியே அடித்துக் கொலைசெய்து புதைத்துவிட்டு கொலையை மறைத்த சம்பவம் கடலூரில் நடந்துள்ளது. 9 மாதத்திற்கு பிறகு உடல் எலும்புக்கூடாக தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.  கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல்நிலையப் பகுதிக்கு உட்பட்ட எஸ்.புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜசேகர். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பிறகு அடிக்கடி ராஜசேகருக்கும் விஜயலட்சுமிக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. விஜயலட்சுமிக்கு அதே ஊரைச் … Read more

‘தமிழாற்றுப் படையுடன் சீமான் மகன் மாவீரன் வீடியோ’: நெகிழ்ந்த வைரமுத்து

Vairamuthu praises Seeman’s son for reading Thamizhattruppadai book: தனது தமிழாற்றுப்படை நூலை படிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகனை பாராட்டி கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து. தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் மிக முக்கியமானர் கவிப்பேரரசு வைரமுத்து. இதுவரை 7500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 7 முறை சிறந்த பாடலாசியருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். திரைப்பாட பாடல்களோடு, கவிதை, கதை போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார். அந்தவகையில், கடந்த 2019ஆம் ஆண்டு … Read more

நான் இன்னும் கொஞ்சம் காலம் நீதிபதியாக இருந்திருந்தால் – இடஒதுக்கீடுத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் பரபரப்பு பேட்டி.!

பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டியின் விவரம் பின்வருமாறு: செய்தியாளர் : தமிழகத்தில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது. அதனை நீதிமன்றமே செல்லாது என்று தெரிவித்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு உள் ஒதுக்கீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆங்காங்கே இது போல் இட ஒதுக்கீடுகள் வருவதும், அது தள்ளுபடி செய்யப்படுவதும், அந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இது ஏன் நடக்கிறது? … Read more

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #UPSC தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்காகப் பணியாற்றவுள்ள அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்! சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பு வாழ்த்துகள்! வெற்றி பெறாதவர்களுக்கு வெற்றிக்கனி எட்டும் தொலைவில்தான் உள்ளது! — M.K.Stalin (@mkstalin) May 30, 2022 இது குறித்த அவரின் ட்விட்டர் … Read more

குடும்ப வறுமை… படிப்பை தொடர முடியாமல் மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி குடும்ப வறுமையால் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதில் ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் சிங்கன்குத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. மாற்றுத்திறனாளியான இவர் கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி பார்வதி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுடைய ஒரே … Read more

பா.ஜ.க ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் சிறையில் அடைப்பு: என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

Youtuber Karthik jailed 15 days on fraud case: அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் பெயரை பயன்படுத்தி, ரூ.44 லட்சம் வசூலித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள, பாஜக ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் சிறையில் அடையிலக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைக்கப் போவதாக கூறி, யூடியூபர் கார்த்திக் கோபிநாத் இணைய தளம் மூலம் ரூ.44 லட்சம் நிதி … Read more

பள்ளி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர்.. போக்சோவில் கைது.!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கார் ஓட்டுநர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் சுப்பிரமணியம் இருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கமான பழக்கத்தால் பள்ளி மாணவி 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி … Read more