விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு – கலக்கும் பிரக்ஞானந்தா!

செஸ் போட்டியில் வென்ற கையோடு மறுநாள் பொதுத் தேர்விலும் கலந்து கொண்ட பிரக்ஞானந்தாவை பலரும் வியப்புடன் பாராட்டி வருகின்றனர். இணைய வழியில் நடைபெற்ற செசபிள் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இந்தத் தொடரில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த பிரக்ஞானந்தாவின் ஆட்டத்தை பலரும் வெகுவாக பாராட்டி உள்ளனர். இந்த நிலையில் 16 வயதான பிரக்ஞானந்தா தற்போது பிளஸ் 1 படித்து வருகிறார். பிளஸ் 1 … Read more

3 பொருள் போதும்… வீட்டிலேயே டேஸ்டி பால்கோவா இப்படி செய்து பாருங்க!

பால், நெய், சர்க்கரை மட்டும் போதும். சில நிமிடங்களில் டேஸ்டியான பால்கோவா நீங்களே உங்கள் வீட்டில் செய்யலாம். எப்படினு பாருங்க! தேவையான பொருட்கள்! பால் – 1 லிட்டர் நெய் – 8 ஸ்பூன் சர்க்கரை – ½ கப் செய்முறை அடுப்பில் கடாய் வைத்து, பால் ஊற்றி கொதிக்க விடவும். முழு கிரீம் பாலாக இருந்தால் இன்னும் நல்லது. பால் சீக்கிரமே கெட்டியாகி விடும். பால் சூடாகி, பாலாடை வரவும், ஒரு மரக்கரண்டி வைத்து கிளறிக் … Read more

ராமநாதபுரம் : கிரிக்கெட் பந்து தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு.!

ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடும் போது நெஞ்சில் பந்து தாக்கியதில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் அருகே வன்னிவயல் கிராமத்தை சேர்ந்த பழனி குமார் என்பவரின் மகன் சுபாஷ் குமார். இவர் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். சுபாஷ் குமாருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது … Read more

சென்னையில் கலைஞர் சிலை திறப்பு.. வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.!

நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களின் வளர்ச்சியால்தான் நாடு வளரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை பொதுப்பணித்துறை சார்பில் நிறுவப்பட்டுள்ளது. 14 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வெண்கல சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு … Read more

முதல்வரின் வீரப்பதக்கம் பெறும் போலீஸாருக்கு குடியரசு தலைவர் பதக்கத்துக்கு இணையான ஊக்கத்தொகை: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முதல்வரின் வீரப்பதக்கம் பெறும் போலீஸாருக்கு, குடியரசுத் தலைவர் பதக்கத்துக்கு இணையான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். காவல் துறை சார்பில், 2019, 2020, 2021-ம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது இதில், 319 காவலர்களுக்கு விருதுகள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் பதக்கங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காவல் துறை மக்களுடன் நெருக்கமானால்தான், குற்றங்கள் … Read more

செய்ததோ உதவி.. விழுந்ததோ தர்மஅடி! பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞரின் பரிதாப நிலை!

சாலையை கடக்க முயன்ற குழந்தையை கையைபிடித்து வீட்டுக்கு கொண்டு சென்று விட்ட பஞ்சு மிட்டாய் விற்பனையாளரை, குழந்தை கடத்தி செல்வதாக தவறுதலாக கருதி பொதுமக்கள் கொடூரமாக அடித்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவர், கோவை ரயில் நிலையம் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். பஞ்சு மிட்டாய் விற்று வரும் யோகேஷ், வார நாட்களில் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்து பஞ்சு மிட்டாய் விற்கிறார். பின் வார இறுதியில் கூட்டம் அதிகமாக … Read more

கலைஞர் சிலை அருகே செல்ஃபி எடுத்து மகிழ்ந்த தொண்டர்கள்!

திராவிட இயக்கத் தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவருமான மறைந்த மு.கருணாநிதியின் திருவுருவச் சிலையை அவரது மகனும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு ஆகியோர் இன்று திறந்துவைத்தனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 16 அடி உயர இந்த சிலை, 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முன்னாள் முதல்வரின் மற்றொரு சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் சிலை வைக்கப்பட்டுள்ளது. 16 … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (29.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 29/05/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 18/14/12 நவீன் தக்காளி 75 நாட்டு தக்காளி 70/60 உருளை 34/24/22 சின்ன வெங்காயம் 45/30/26 ஊட்டி கேரட் 40/35 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 80/50 பீட்ரூட். ஊட்டி 50/45 கர்நாடக பீட்ரூட் 30 சவ் சவ் 18/16 முள்ளங்கி 20/18 முட்டை கோஸ் 35/30 வெண்டைக்காய் 40/30 உஜாலா கத்திரிக்காய் 35/30 வரி கத்திரி … Read more

புதுச்சேரியில் மது அருந்தியதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் – பார் ஊழியர்கள் மீது தாக்குதல்

புதுச்சேரியில் மது அருந்தியதற்கு பணம் கேட்ட மதுக்கடை உரிமையாளரை இளைஞர்கள் உருட்டு கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மதுக்கடைக்கு வந்த 2 இளைஞர்கள் மது அருந்தி விட்டு, பில் தொகையில் பாதியை மட்டும் தான் தரமுடியும் என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆதரவாளர்களை வரவழைத்து கடையின் உரிமையாளரை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 4 பேர் … Read more

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்குவதை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம்: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை ஒரு காலத்திலும் ஏற்க மாட்டோம் என்றும், பாஜகவின் கை பொம்மையாக ரங்கசாமி செயல்படுகிறார் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், கச்சத்தீவை மீட்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக மத்திய அரசு வைக்க வேண்டும், கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு … Read more