#வேலூர் || ஓட்டயைப்போட்டு ஆட்டையைப்போட்ட கள்ளக்குறிச்சி முருகன், பிரபாகரனை கைது செய்த தனிப்படை போலீசார்.! 

கடந்த 24ம் தேதி காட்பாடி அருகே நகை அடகு கடை சுவற்றில் ஓட்டை போட்டு, 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகன் மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காடு கூட்ரோடு பகுதியில் இயங்கி வரும் ஒரு நகை அடகு கடையில், சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள … Read more

விலை உயர்வால் தக்காளி டிரேயை திருடிய இளைஞர்.!

சேலம் அருகே மளிகை கடையில் இருந்த தக்காளி டிரேயை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் உள்ள ஒரு மளிகை கடையின் முன் இருந்த தக்காளி டிரேயை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானது. புகாரின் பேரில், வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து தொடர் தக்காளி திருட்டில் ஈடுபட்ட சின்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். Source link

சென்னை உயர் நீதிமன்றம் போல மாவட்ட நீதிமன்றங்களும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தைபோல மாவட்ட நீதிமன்றங்களும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவுறுத்திஉள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம், நீதித்துறை அலுவலர்கள் குடியிருப்பு மற்றும் உடுமலை கூடுதல் மாவட்ட நீதிமன்ற கட்டிடங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி நேற்று திறந்துவைத்தார். திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் வரவேற்றார். இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் … Read more

சொத்து வரி செலுத்தாத ஹோட்டல்களா?.. பாய்கிறது ஜப்தி நடவடிக்கை!

நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், சொத்து வரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், அதிக வரி பாக்கி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, சமீபகாலமாக அதிக சொத்து வரி நிலுவை வைத்திருக்கும் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து … Read more

எமனான சாக்லேட் மில்க், பானிபூரி… சென்னையில் 11 வயது சிறுவன் பலி

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த மணிகண்டன்- திவ்யா தம்பதிக்கு, யுவராஜ்(12) வசந்தகுமார்(11), ஈஸ்வரன்(8) என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளன. இவர்கள் துரைப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணன், தம்பி மற்றும் உறவினர் மகன் ஆகியோருடன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த வசந்தகுமார், அங்கிருந்த சாலையோர கடையில் 5 ரூபாய்க்கு சாக்லேட் மில்க் வாங்கி குடித்துள்ளான். இதைத்தொடர்ந்து, மற்றொரு கடையில் பானிபூரி சாப்பிட்டுவிட்டு, வீட்டருகே வந்தபோது வலிப்பு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கதினர், சிறுவனை … Read more

சிதம்பரம் அருகே சாகசத்தின் போது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி பலி.!

சிதம்பரம் அருகே சாகசத்தின் போது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவஜோதி நகரை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி புருஷோத்தமன். இவர் இருசக்கர வாகனத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி அருகே உள்ள விளையாட்டு மைதானம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தனியார் பொறியியல் கல்லூரி மாணவரான தர்ஷன் மற்றும் அவரது நண்பர்களுடன் பைக்கில் சாகசம் செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக புருஷோத்தமன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த … Read more

ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை சோதனை

கோவையில் பிரபல ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் இரண்டாம் நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆர்.எஸ் புரம், காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 8 ஹோட்டல்கள், 5 வீடுகள், உணவக உரிமையாளரின் நெருங்கிய உறவினர் வீடுகள் என மொத்தம் 25 இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது. அதில் 20 இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், இரண்டாம் நாளாக இன்று 5 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். … Read more

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அல்ட்ரா டெக் சமூக நல அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளி மாணவருக்கான திசைகாட்டி வீடியோ

அரியலூர்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அல்ட்ராடெக் சமூக நல அறக்கட்டளை சார்பில்,10-ம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘திசைகாட்டி-2022’ யூ-டியூப் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், இஸ்ரோ முன்னாள்இயக்குநரான விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, வருமான வரித் துறை முன்னாள் அதிகாரி ஆர்.பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, கடலோர காவல் மற்றும் பாதுகாப்பு சேவைகள் கமாண்டன்ட் சோமசுந்தரம் ஆகியோர் பங்கேற்று, 10-ம்வகுப்பு … Read more

அம்பத்தூரில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. விசாரணையில் வெளிவந்த காரணம்!

அம்பத்தூரில் இளைஞர் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்று வெட்டி படுகொலை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அம்பத்தூர் சண்முகபுரம், அன்னை இந்திரா நகர், கோரை தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 25). இவர் அம்பத்தூர் காவல் நிலைய பதிவேட்டில் ரெளடி பட்டியலில் இருக்கிறார். இவரது மனைவி சங்கீதா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டாகிறது. 7 மாதத்தில் கவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. உதயகுமார் கடந்த 4 … Read more

Tamil News Today Live: ஓராண்டில் 102 டன் போதைப்பொருள் பறிமுதல்” – அமைச்சர் மா.சு

Go to Live Updates Tamil Nadu News Updates: சென்னை மாநகராட்சிக்கு நிலுவையிலுள்ள சொத்து வரியில் கடந்த 15 நாளில் ரூ40 கோடி வசூலிப்பு.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ரூ220.64 கோடி சொத்துவரி வசூல் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். ஐபிஎல் நிறைவு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை … Read more