Chennai power cut today: சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்வெட்டு!

சென்னையின் தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர், பொன்னேரி, பெரம்பூர், ஐ.டி. காரிடார், அடையாறு ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.நகர்: ஆர்.ஆர்.காலனி ராமாபுரம் ராமசாமி தெரு, … Read more

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான … Read more

தமிழகத்துக்கு கடும் குளிர் அலை எச்சரிக்கை ஏதுமில்லை – வானிலை ஆய்வு மையம் திட்டவட்டம்

சென்னை: தமிழகத்துக்கு கடும் குளிர் அலை எச்சரிக்கை ஏதும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குளிர் அலை உருவாகும் என்று சமூகவலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றில், ‘‘தற்போது சூரியனிடமிருந்து பூமி வெகு தூரம் நகர்ந்து செல்கிறது. அதனால் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு தமிழகத்தில் நிலவிய வெப்பநிலையை விட குளிர்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை மக்கள் … Read more

பேருந்தை பார்த்து பீறிட்டு கத்திய ஒற்றை காட்டு யானை… அலறிய பயணிகள்!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக காேவை செல்லும் சாலையின் ஓரத்தில் நின்ற ஒற்றை காட்டுயானை அரசு பேருந்தைப் பார்த்து பிளிறியது. இது பேருந்து பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை செல்லும் மாற்று வழியான மஞ்சூர், கெத்தை சாலை உள்ளது. இங்கு கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒற்றை காட்டு யானை சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தைப் பார்த்து பிளிறியது. இதனால் பேருந்து பயணிகள் அச்சமடைந்தனர். சாலை ஓரங்களில் … Read more

Tamil News Live Update: சென்னையில் மேலும் 1,011 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. போரிஸ் ஜான்சன் ராஜினாமா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, அவரைக் கண்டித்து அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகினர். … Read more

நான் தான் அதிமுகவின் பொது செயலாளர்.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய புள்ளி.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து வருகிறது. தலைமையை கைப்பற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட உள்ளார் எப்படியாவது அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இதுவரை நடைபெற்ற வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு சாதகமாக வழக்குகள் முடித்துள்ளது.  இதனிடையே தமிழக … Read more

விட்டா பாம்பை கடிச்சி திண்ணுருவாரு போல..! டான்ஸ்ன்னாலும் நியாயம் வேணாமா ? ஸ்னேக் பாபுவை வனத்துறை தேடுகின்றது

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கோவில் விழாவில் நாகப்பாம்புகளை வைத்தும், சாரை பாம்புகளை கடித்தும் நடன நிகழ்ச்சி நடத்தியவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர், பாம்புகளை பாடாய்ப்படுத்திய ஸ்னேக் பாபுவின் சேட்டை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. பாம்பு கடித்து பார்த்திருப்போம் பாம்பை வாயால் கடித்தவரை பார்த்திருக்கிறோமோ ? அப்படிப்பட்ட வினோத வில்லங்க சேட்டைகளை மேடையில் செய்த ஸ்னேக் பாபு இவர் தான். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள எஸ்.குமாரபுரத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவில் கொடை விழாவினை முன்னிட்டு … Read more

முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 5 மணி அளவில் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீஸார் வந்து சோதனையை தொடங்கினர். அதேபோல மன்னார்குடி முதல் தெருவில் உள்ள அதிமுக … Read more

ஸ்ரீபெரும்புதூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சோகம்: குழந்தை உட்பட 3 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே இரண்டு கார்கள் மீது சிமெண்ட் மிக்சர் லாரி மோதிய விபத்தில் 7 மாத குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது, சாலையில் எதிர்திசையில் கட்டுப்பாட்டை இழந்து வந்த சிமெண்ட் மிக்சர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு காரில் வந்த கமல்குமார் (43) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான தேவேஷ்குமார் (35) என்பவரை மீட்டு ஆபத்தான … Read more