ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும்: சீமான்

சென்னை: “அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யாவும், மோகனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பெண்ணின் சகோதரனும், மைத்துனனும் விருந்து வைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்து வெட்டிப்படுகொலை செய்திருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தங்களது விருப்பத்தின் பெயரில், காதலித்து, சாதியை … Read more

முதலமைச்சரை தகாத வார்த்தைகளால் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேலப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை பதிவுசெய்து பரப்பியதாக ஆரணி தாலுலா காவல் நிலையத்தில் ரவி என்பவர் புகார் அளித்திருந்தார். அதில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் … Read more

ஸ்ட்ராபெரி பழம் என்ன கலர் சொல்லுங்க? சிவப்பா? நீலமா? சாம்பல் நிறமா?

ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்களை பைத்தியமாக்கி வருகிறது. இந்த வைரல் ஆப்டிகல் இல்யூஷன் படம், உங்களை இருக்கும் நிறத்தை புறக்கணித்து, இல்லாத நிறத்தை இருக்கிறது என்று நம்பும்படி உங்களை ஏமாற்றுகிறது. பெரும்பாலான ஆப்டிகல் இல்யூஷன் படம் மனித மூளையைக் குழப்புவதன் மூலம் ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷனும் அந்த வரிசையில் உங்களை குழப்பும் படம்தான். கீழே உள்ள படத்தில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரிகளைப் பார்த்துவிட்டு, நீங்கள் பார்த்தது என்ன கலர் என்று கூறுங்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை … Read more

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வெடித்த நாட்டு வெடிகுண்டு.. காவல்துறை விசாரணை..!

இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நாட்டு வெடி குண்டு தவறி விழுந்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பரணிபுத்தூர் நான்கு வழி சாலையில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதனால், அங்கிருந்த டீகடையில் கண்ணாடி நொறுங்கியதோடு இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் படுகாமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டனர். அப்போது, காயமடைந்தவர் ஐப்பன்தாங்கலை சேர்ந்தவர்  வினோத்குமார் என்பதும் நண்பர்களுடன் சென்ற இவர் பேப்பர் … Read more

தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ரோஸி பாட்டி.. கேட்பாரின்றி சடலமாக கிடந்தார்..!

இறந்த பின்னர் தன்னை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஒருவாரமாக வீட்டில் கேட்பாரற்ற சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்த 66 வயது ஆதரவற்ற மூதாட்டி ரோஸி..! இந்த மூதாட்டிக்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் செய்து வந்த … Read more

“ஒற்றைத் தலைமை பற்றி பொதுக்குழு முடிவு செய்யும்” – ஓபிஎஸ் தலைமையிலான கூட்டத்துக்குப் பின் பொன்னையன் தகவல்

சென்னை: “ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக பேசவில்லை. கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல இணைந்து செயல்படுகின்றனர். ஒற்றைத் தலைமை எல்லாம் மற்றவர்கள் கிளப்புகிற பிரச்சினை” என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களை இறுதி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர்கள் … Read more

வலுக்கும் ஒற்றைத் தலைமை கோரிக்கை -அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை

ஒற்றைத்தலைமை குறித்து கடந்த 3 தினங்களாக பிரச்சினை வலுத்துள்ள நிலையில், செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் 10 பேர் ஈடுபட்டுள்ளனர். அதில், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், செம்பலை, ஜெசிடி பிரபாகரன், வைகை செல்வன், ஆர்பி உதயகுமார், மனோஜ் பாண்டியன், தர்மர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் கடந்த 3 தினங்களாக வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோருடன் ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுவந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து … Read more

சென்னை 2-வது விமான நிலையம்: பரந்தூர்-ஐ விட பன்னூரில் அமைய வாய்ப்பு அதிகம்!

சென்னையின் 2வது விமான நிலையத்தை அமைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட ஒரு தளமான பன்னூர், மற்ற முன்மொழியப்பட்ட தளமான பரந்தூரை விட சில நன்மைகளைக் கொண்டுள்ளது என்று முன்-சாத்திய அறிக்கை கூறுகிறது. மற்ற அனைத்து தளங்களை விட பன்னூர் அதிக நன்மைகளை கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. இருப்பினும், கூடுதல் மதிப்பீட்டிற்கு விரிவான திட்ட அறிக்கை செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், சில சவால்கள் இருந்தாலும் இரண்டு இடங்களும் விமான நிலையத்திற்கு ஏற்றவை என்று அறிக்கை கூறுவதாக தி இந்து நாளிதழில் … Read more

நடைபாதைக்காக தகராறு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதல்..!

கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தாரை தாக்கியவர்களை தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கேரளாபுரத்தில் வசித்து வருபவர் கில்பர்ட் ராஜன்.  இவருக்கு திருமணமாகி பிரதிஷா டேனி  என்ற மனைவி இருக்கிறார். கில்பர்ட் ராஜூக்கும் அவரது அண்டை வீட்டில் வசிக்கும் ஏஞ்சல் சகாரினுக்கும் இடையே அவர்களின் நடைபாதை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. // இந்நிலையில்,  சம்பவதன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏஞ்சல் சகாரின் தனது தம்பியுடன்  சேர்ந்து கில்பர்ட் ராஜன், அவரது கர்ப்பிணி மனைவி பிரதிஷா டேனி மற்றும் அவரது குடும்பத்தினரை … Read more

சென்னை விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகள் மீண்டும் அமல்.!

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீண்டும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் சென்னை விமான நிலையத்திற்கு  வரக்கூடியவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் முக கவசம் அணியாமல இருந்தால் விமானத்தில் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் “நோ மாஸ்க், நோ எண்ட்ரி” என்ற ஸ்டிக்கர்கள் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன.  Source link