10 லட்சத்துக்கு 2 கிலோ தங்கமா? பேராசையால் ரூ.5 லட்சத்தை இழந்த உணவக உரிமையாளர்

2 கிலோ தங்கம் 10 லட்சம் ரூபாய் எனக்கூறி போலி தங்கத்தை கொடுத்து ஏமாற்றிச் சென்ற வடமாநில மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஆலந்தூர், வேதகிரி தெருவைச் சேர்ந்தவர் மணி (55), இவர் படப்பையில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், உணவகத்தில் சாப்பிட வந்த வடமாநில இளைஞர் ஒருவர், மணியிடம் 2 கிலோ தங்க உருண்டை என்னிடம் உள்ளது. எனக்கு அவசர பணத்தேவை இருப்பதால் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் 2 கிலோ தங்கத்தை … Read more

துப்புரவு பணியின்போது உயிரிழந்த 2 ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம்

சென்னை: சென்னை குடிநீர் வாரிய துப்புரவு பணியின்போது உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் நிவாரணத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதவரத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி ஜெட்ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரங்களை பயன்படுத்தி கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது இயந்திர துளையில் … Read more

அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்து கிடந்த ஆண் சிசு – போலீசார் விசாரணை

பரமக்குடி அரசு மருத்துவமனை கழிப்பறையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவால் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக தூய்மை பணியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு சுமார் 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த ஆண் சிசு இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தலைமை மருத்துவர் முத்தரசனிடம் இந்த தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலைமை மருத்துவர், சோதனை செய்து பார்த்ததில் … Read more

அஸ்வினுக்கு ஒரு நீதி, கோலிக்கு ஒரு நீதியா? கபில்தேவ் கேள்வி

Kapil Dev Tamil News: கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். இவர் இந்திய கிரிக்கெட் அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கபில் தேவ் 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வினை ஆடும் லெவனியில் இருந்து கழற்றி விடும் போது, தனது நீண்ட கால மோசமான பேட்டிங்கிற்கு பிறகு விராட் கோலியையும் டி20 போட்டிகளில் கழற்றி விட வேண்டியது தானே? என்று … Read more

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு.!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு எழுத்தர், உதவியாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8, 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திண்டுக்கல் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் பணியின் பெயர் : பதிவு எழுத்தர், … Read more

அச்சிறுப்பாக்கம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு; மோடி இரங்கல்: முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே முன்னால்சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து 30 பயணிகளுடன் சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று காலைசென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தை முரளி என்பவர் ஓட்டினார். அச்சிறுப்பாக்கம் அடுத்ததொழுப்பேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனத்தை முந்திசெல்வதற்காக ஓட்டுநர் இடதுபக்கமாக ஏறிச்சென்றதாகவும் அப்போது, இடதுபக்கம் இரும்புக் கம்பிகளை ஏற்றிச்சென்ற லாரிக்கும் வலதுபுறம் … Read more

கன்னியாகுமரி: திருமண வரன்களை தடுப்பவர்களுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள வில்லங்க போஸ்டர்

கருங்கல் அருகே திருமண வரன்களை தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வில்லங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க, பெண் வீட்டார் விசாரிக்க வரும்போது சிலர் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் இளைஞர்கள் தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் விதத்தில் வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி, இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர்கள் சங்கம் என்று பேனர் வைப்பதும், போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்து … Read more

வருங்காலத்தில் இந்த பாடப்பிரிவு முக்கியத்துவம் பெறும்: மாணவர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு அட்வைஸ்

மத்திய மண்டலத்திற்குட்பட்ட  திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் 12-ம் மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், காவல்படைத் தலைவர் சைலேந்திர பாபு கலந்து கொண்டார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில், ’தழைக்கட்டும் நமது தலைமுறை’ என்ற தலைப்பில்,  மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டு நிகழ்வு  நடைபெற்றது. … Read more