அரசு மருத்துவமனை கழிப்பறையில் சடலமாக கிடந்த ஆண் சிசு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறையில் குறைபிரசவத்தில் 7 மாதத்தில் பிறந்த ஆண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அளித்த புகாரின் பேரில், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை கழிவறையில் வீசிச் சென்றவர்கள் யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Source link