சனாதனத்திற்கு சாவு மணி அடித்து விட்டோம்; எந்தக் கொம்பனாலும் உயிர்ப்பிக்க முடியாது: துரைமுருகன்

திமுக பொதுச் செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “இந்த மண்ணினுடைய பெருமைத் தெரியாமல் ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். சனாதனத்துக்கு சாவு மணி அடித்த மண், இந்த மண். அதை மீண்டும் உயிர்ப்பிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது” காட்டமாகக் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட தி.மு.க சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.பி ஆ.ராசா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினார்கள். திராவிட மாடல் … Read more

குடும்ப பிரச்சினை காரணமாக ஆட்டோ ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.!

குடும்ப பிரச்சினை காரணமாக ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் குரங்கணி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்றும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் கோபித்து கொண்டு வெளியே … Read more

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை 750 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரைப் பெறுவதற்கு டெபாசிட் தொகை 1450 ரூபாய் என்று இருந்த நிலையில், இனி 2200 ரூபாய் செலுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதே போன்று இரு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெற 4400 ரூபாய் செலுத்த வேண்டும். 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகையும், 800 ரூபாயில் இருந்து 1150 … Read more

‘விபத்து அவசர சிகிச்சை மையம்’ – தமிழக அளவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதலிடம்

மதுரை: நோயாளிகளுக்கு உயிர் காக்கும் அவசர சிகிச்சை வழங்குவதில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ‘விபத்து அவசர சிகிச்சை மையம்’ மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தென் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துமவனைகளில் முதன்மையானது. மதுரை மட்டுமில்லாது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து அனைத்து விதமான நோய்களுக்கும் நோயாளிகள் சிகிச்சைப்பெற வருகிறார்கள். இதற்காக அண்ணா பஸ் நிலையம் அருகே … Read more

ஜெயக்குமாரின் கருத்தெல்லாம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்தல்ல – கோவை செல்வராஜ்

இரட்டை தலைமையாக செயல்பட வேண்டும் என்பதுதான் ஒ.பன்னீர் செல்வத்தின் கருத்து என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார். ஓபிஎஸை அவரது இல்லத்தில் சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர். கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவில் ஒற்றை தலைமையை எந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒ.பன்னீர்செல்வம் தான் கட்சியை வழி நடத்துவார். இயக்கத்தையும் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டும். இந்த இயக்கத்தை காப்பாற்றும் தகுதியும் பொறுப்பும் ஒ. பன்னீர் செல்வத்துக்கு மட்டும்தான் உள்ளது. மாவட்ட செயலாளர்கள் … Read more

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன்: புற்றுநோய் சிகிச்சை கருவி கொண்டு வர உறுதி

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முன்னாள் டீன் வனிதா கடந்த மாதம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக மருத்துவர் நேரு பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் 1603 படுக்கைகள் உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறியவர்களுக்கு 20, பெரியவர்களுக்கு 75 … Read more

ஆங்கிலேயன் பயந்து நடுங்கிய தமிழனின் தனித்துவமான ஆயுதம்.! பூலித்தேவருக்கு உதவ மறுத்த கட்ட பொம்மு.! 

தமிழகத்தில், அதிலும் குறிப்பாக தென் தமிழகத்தில், மருதநாயகத்தின் மறைவிற்குப் பின்னர், ஆங்கிலேயரின் அடக்கு முறை நேரடியாகவே நடைபெற்றது. ஆங்கிலேயரிடம் பீரங்கி உள்ளிட்ட நவீன ஆயுத பலம் இருந்தாலும், அவர்கள் பயந்தது, தமிழர்களின் ஒரு ஆயுதத்திற்கு மட்டுமே. அந்த ஆயுதத்தின் பெயர் வளரி. 147 டிகிரி வளைவு கொண்ட, இந்த வளைந்த வாள், கைப்பிடியுடன் சம எடையில் இருக்கும்.  இப்போது, நமக்கு தெரிந்த பூமராங் மாதிரி தான். ஆனால், இந்த ஆயுதத்தை முறையான பயிற்சி இல்லாமல் கையாள முடியாது. … Read more

60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தமிழக சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிப்பு

கும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரு சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகுருநாதன் சுவாமி கோவிலில் இருந்த சோமாஸ்கந்தர் மற்றும் தனி அம்மன் சிலைகள் திருடப்பட்டு, போலியான சிலைகள் மாற்றி வைக்கப்பட்டது தெரியவந்தது. திருடப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நார்டன் சைமன் மியூசியத்திலும், அம்மன் சிலை அமெரிக்காவின் டென்வர் மியூசியத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரு சிலைகளை மீட்கும் பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு … Read more

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணைய வலைதளத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பதிவேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள மாநில தேர்தல் ஆணையங்கள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பையும் பதிவேற்றியுள்ளதாக அரசியல் கட்சியினருக்கு மாநிலத் தேர்தல் ஆணையர் தாமஸ் பி ராய் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் … Read more

அரியலூர்: குழி பணியாரத்தில் மெல்லிய இரும்பு கம்பி இருந்ததால் அதிர்ச்சி

அரியலூரில் பிரபல உணவகத்தில் குழி பணியாரத்தில் இரும்பு பின் இருந்ததால் சாப்பிட்டவர் அதிர்ச்சி அடைந்தார். அரியலூர் ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் ராஜலிங்கம். இவர் எருத்துக்காரன்பட்டி 9 வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக இருக்கின்றார். இந்நிலையில் இவர், அரியலூரில் உள்ள பிரபல உணவகத்தில் குழி பணியாரம் சாப்பிட்டார். அப்போது அதில் மிக மெல்லியதாக இரும்பு கம்பி போன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு … Read more