கொடைக்கானலில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் முறை: ‘குடி’ மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் தொய்வு

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையில் 50 சதவீதத்துக்கும் குறைவான பாட்டில்களே திரும்பப் பெறப்படுகின்றன. கொடைக்கானலில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீசிவிட்டுச் செல்வதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கவும், குப்பைகள் சேர்ந்து இயற்கை எழிலை கெடுப்பதை தவிர்க்கவும் நீதிமன்ற உத்தரவுப்படி காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் முறை அமலுக்கு வந்தது. கொடைக்கானல் வட்டத்தில் இயங்கி வரும் 9 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் … Read more

சென்னை: சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு ரூ.15 லட்சம் அபராதம்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் மொத்தம் ரூ.15.18 லட்சம் அபராதத்தை மாநகராட்சி விதித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதற்கும், சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீறும் நபர்கள் மீது மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த இரண்டு வாரங்களில் குப்பைகள் கொட்டிய நபர்களிடமிருந்து … Read more

அரியலூர் அருகே அழகிகளை வைத்து 'அந்த' தொழில்… சுத்துப்போட்ட தட்டிதூக்கிய போலீஸ்.!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் நீண்ட நாட்களாக விபசாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்திரா உள்பட 5 பெண்கள் சில ஆண்கள்  விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு … Read more

தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சு

தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், கண் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான கருத்தரங்கை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்திருந்தாலும், உயிரிழப்புகள் குறைவாகவே இருப்பதாக கூறினார்.  Source link

‘இயற்கையிடம் இருந்து மனிதன் வெகுதூரம் சென்றதால் தவறு நடக்கிறது’ – உயர் நீதிமன்ற நீதிபதி ஆதங்கம்

புதுச்சேரி: இயற்கையிடம் இருந்து மனிதன் வெகுதூரம் வந்து விட்டதால்தான் நிறைய தவறு நடக்கிறது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆதங்கப்பட்டுள்ளார். புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது. அதோடு ஒவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும், உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு … Read more

மேம்பாலத்தின்மீது திடீரென கழன்ற கார் டயர் – நூலிழையில் தப்பிய முன்னாள் எம்.எல்.ஏ மகன்

மதுரையில் மேம்பால சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயர் தீடீரென கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலத்தில் மறைந்த முன்னாள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மகன் சங்கர் தனது காரில், டிவிஎஸ் நகரில் இருந்து காளவாசல் பைபாஸ் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, போடி லைன் மேம்பாலத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது சாலை இறக்கத்தில் பின்புற டயர் திடீரென கழன்று தனியாக வெளியே வந்தது. சுதாரித்துக் கொண்ட சங்கர் உடனடியாக வாகனத்தை … Read more

பொன்னியின் செல்வனா? பாகுபலியா? தமிழ் தெலுங்கு ரசிகர்களிடையே மூண்ட மோதல்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானதை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் வெளியான பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு தெலுங்கு ரசிகர்கள் கேலி செய்ய தொடங்கியுள்ள நிலையில் இதற்கு தமிழ் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர் . அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை படமாக எம்.ஜி.ஆர் உட்பட பலரும் முயற்சி செய்தனர். ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிநத நிலையில், தற்போது இதை வெற்றிகரமாக … Read more

பக்ரீத் திருநாள் : டிடிவி தினகரன், கமல்ஹாசன் வாழ்த்து.!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்து செய்தியில், “தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை பெரிய இழப்புகள் வந்தாலும் மாற்றுக்குறையாத அன்போடும், மாறாத உறுதியோடும் தியாகங்களைச் செய்பவர்களுக்கு முழுமையான இறையருள் கிடைக்கும் என்பதற்கு பக்ரீத் திருநாள் உதாரணமாக இருக்கிறது. தனக்கென வாழாத தியாகத்தின் சிறப்பும், வலிமையும் எப்போதும் உயர்வானது. இறை தூதர் இப்ராகிம் அவர்களின் தியாகத்தைப் போற்றும் இப்புனித நாளில் … Read more

சிறுமியின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உயர் நீதிமன்ற கிளை அனுமதி

சிறுமி ஒருவரின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவில் தனது மகளை ஒருவர் ஏமாற்றிவிட்ட நிலையில், கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மருத்துவ அவசரத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவருடன் வாட்ஸ் அப் காலில் பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளித்தார். Source link

செஞ்சியை சேர்ந்த வாசன், பூஜாவுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

திருவண்ணாமலை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (ஜூலை 8), செஞ்சியில் சாதிச் சான்றிதழ்கள் கோரிய மாணவன் வாசன் மற்றும் மாணவி பூஜா ஆகியோருக்கு இன்று பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஜூலை 8) திருவண்ணாமலை செல்லும் வழியில், செஞ்சியில் முருகன் என்பவரின் மகன் வாசன் மற்றும் மகள் பூஜா ஆகியோர் சந்தித்து, தங்களுக்கு கடந்த ஏழு … Read more