சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (10.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 10/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 16 நாட்டு தக்காளி 13/10 உருளை 32/25/23 சின்ன வெங்காயம் 30/26/20 ஊட்டி கேரட் 55/45/40 பெங்களூர் கேரட்  பீன்ஸ் 60/50/40 பீட்ரூட். ஊட்டி 45/40 கர்நாடக பீட்ரூட் 20/18 சவ் சவ் 18/15 முள்ளங்கி 15/14 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 25/20 உஜாலா கத்திரிக்காய் 15/12 வரி கத்திரி … Read more

’வருமுன் காப்போம்’ திட்டத்தில் கண்புரை பரிசோதனையும் இனிமேல் சேர்க்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கண்புரை பரிசோதனை சேர்க்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கண் அறுவை சிகிச்சை தொடர்பான 2 நாள் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கின் தலைமைச் செயலரும், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவக் குழுமத் தலைவருமான அமர் அகர்வால் தலைமை வகித்தார். பொருளாளரும், ராஜன் கண் மருத்துவமனை தலைவருமான மோகன்ராஜன், அறிவியல் குழுத் தலைவர் மஹிபால் எஸ்.சச்தேவ், அகில இந்திய கண் … Read more

கிராம நிர்வாக அலுவலர், உதவியாளரை ஆக்கிரமிப்பாளர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரை, ஆக்கிரமிப்பாளர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி புதுக்குடி கிராமத்திற்கு உட்பட்ட பன்னீர்குளம் என்ற குளத்தை மேலகடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் (வயது 40) மற்றும் ஆல்பர்ட் (50) என்ற இரண்டு நபர்களும் சேர்ந்து ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் அதிகாரிகள் … Read more

தோப்பூர் டு ஒத்தக்கடை மெட்ரோ ரயில்? மதுரையில் சென்னை அதிகாரிகள் ஆய்வு

Madurai Metro rail project feasibility check by Chennai officials: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்நிலையில் மார்ச் பட்ஜெட் கூட்டத்தில் மதுரை மெட்ரோ ரயில் குறித்த அறிக்கை தயாரிப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையும் படியுங்கள்: சசிகலாவால் நள்ளிரவில் அலறிய மைக்குகள்; பரபரப்பான காவலர்கள்  … Read more

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடந்த ஜூன் 30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதையடுத்து,  உயர்கல்வியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டது. இந்த வகையில் … Read more

ஓபிஎஸ்ஸிடம் இருந்து விலகியது ஏன்? – முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி விளக்கம்

சென்னை: திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்பட்டதால் அவரிடம் இருந்து விலகியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் இபிஎஸ் இல்லம் முன்பு செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி நேற்று கூறியதாவது: நான் திமுகவுடன் தொடர்பு வைத்து, பெட்ரோல் பங்க்கை பெற்றிருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குற்றம்சாட்டி இருந்தார். அந்த பெட்ரோல் பங்க்கை நடத்துவதற்கான உத்தரவு கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியில் என் மகனுக்கு வழங்கப்பட்டது. கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நான்கரை ஆண்டுகள் இபிஎஸ்ஸுடன் துணை … Read more

மொத்த வாக்கு 289!பதிவானதோ 329! உள்ளாட்சி இடைத்தேர்தலில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக புகார்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரமேல் ஊராட்சி 3 வது வார்டில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட அகரமேல் ஊராட்சியில் 3 வது வார்டு உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்ததால் நேற்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, சுயேட்சை என மூன்று பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்தம் 343 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில் காலை முதல் விறு, விறுப்பாக வாக்குபதிவு … Read more

சுப. உதயகுமாரன் எழுதும் தன்னைத்தான் காக்கின் – 14

சுப. உதயகுமாரன் [14] பரிந்துணர்வு கொள்வோம் [] ஒரு பேருந்தில் நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும்போது, கைக்குழந்தையுடன் ஒரு பெண் ஏறினால், எழுந்து நின்று உங்கள் இருக்கையை அந்தப் பெண்ணுக்குத் தருவீர்களா? அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பீர்களா? [] ஓர் அஞ்சல் அலுவலகத்துக்கு நீங்கள் போகும்போது, உங்களுக்கு முன்னால் வந்து வரிசையில் நிற்போர் தங்கள் வேலைகளை முடிக்கட்டும் என்று காத்திருப்பீர்களா? அல்லது முண்டியடித்து உங்கள் வேலையை முடித்துக்கொள்ளப் பார்ப்பீர்களா? [] ஒரு நண்பர் ஏதோ ஒரு கொண்டாட்டத்திற்காக, உங்களை ஓர் … Read more

தமிழக அரசின் அலட்சியம்.. பறிபோன உயிர்.. விஜயகாந்த் கண்டனர்.!!

காட்டு யானை தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஆரோட்டு பாறை செல்வபுரத்தைச் சேர்ந்த விவசாயி நாதன் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.  வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்த மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மூன்று பேர் காட்டு … Read more

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் ஒரு கோடியே 45லட்சம் பேர் உள்ளனர். சென்னையில் தடுப்பூசி செலுத்த 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.   Source link