அனில் அம்பானி கருப்பு பண வழக்கு: வெளிநாட்டில் ரூ800 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு

வெளிநாட்டில் கணக்கில் வராத சொத்துகள், முதலீடுகள் இருப்பது உறுதியானதையடுத்து, 2015 கருப்புப் பணச் சட்டத்தின் (பிஎம்ஏ) கீழ் ரிலையன்ஸ் (ADA) குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு எதிராக வருமான வரி புலனாய்வு பிரிவின் மும்பை யூனிட் தனது இறுதி உத்தரவை மார்ச் 2022இல் நிறைவேற்றியது. 2019 இல் முதல்முறையாக கணக்கில் வராத வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாக அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, கருப்புப் பணச் சட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், வெளிநாட்டு நிறுவனங்களின் … Read more

தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் தீவிபத்து.. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைப்பு..!

தனியார் காப்பீட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் அண்ணாசாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பு வளாகத்தின் எதிரே தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில், தரைதளத்தில் ஜவுளிகடையும் 2-ம் தளத்தில் கல்வி நிறுவனமும், மூன்றாம் தளத்தில் 2 தனியார் காப்பீட்டு நிறுவனமும் செயல்ப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் திடீரென காப்பீட்டு அலுவலகத்தில் கரும்புகை ஏற்பட்டது. அக்கம்பக்கதினர் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்புதுறைக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த … Read more

கடத்தப்பட்டு மீட்கப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் தந்தையுடன் கைது – ஏன்?

சேலம் அருகே 20 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்டு மீட்கப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் அவரது தந்தையுடன் கைது செய்யப்பட்டார். பட்டை கோவில் பகுதியில் முல்லாராம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது மகன் ஜெயராமை கடந்த 2-ஆம் தேதி மர்மகும்பல் கடத்திச் சென்றது. தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், பெங்களூரிலிருந்து ஜெயராமை மீட்டு சேலம் அழைத்து வந்தனர். அந்த கடையில் வேலை பார்த்து வந்த சன்வாலா ராம் என்பவர் பான் பராக்-குட்கா பொருட்கள் … Read more

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தீர்வு காணாவிட்டால் போராட்டம்: கர்நாடக அரசுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக எல்லையில் இருந்து4 கி.மீ. தொலைவில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணையால் காவிரிக்கு தண்ணீர் வருவது தடைபட்டு, டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறும். கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பான வரைவு அறிக்கையை அளித்தபோது, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டாமல், மத்திய நீர்வள அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திடீர் விசிட் செய்த அமைச்சர் சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அமைச்சர் சேகர்பாபு தற்போது திடீர் விசிட் அடித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் 2014 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் 2014 முதல் இந்நாள் வரை கோயிலின் கணக்கு வழக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என, தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு கோயில் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்புடைய செய்தி: ‘சிதம்பரம் நடராஜர் … Read more

இவ்ளோ நேரம்தான் ஊற வைக்கணும்… இட்லி மாவு ஒரு வாரம் வரை புளிக்காமல் இருக்க இப்படி பண்ணுங்க!

வெயில் காலம் என்பதால், நாம் வீட்டில் ஆட்டும் இட்லி மாவை ஃபிரிட்ஜில் வைத்திருந்தாலும் கூட 1 அல்லது 2 நாள்களில், மாவு புளித்து வருகிறது. அதனை தடுத்திட, மாவு அரைக்கும் போதே சில விஷயங்களை செய்தால் போதும் என கூறப்படுகிறது. அதனை விரிவாக இச்செய்தி தொகுப்பில் காணலாம். மாவு அரைக்க இட்லி அரிசியை தண்ணீரில் போட்டு ஊற வைக்கும்போது, 3 லிருந்து 4 மணி நேரம் வரை மட்டுமே ஊற வைக்க வேண்டுமாம். அதற்கு மாறாக சிலர், … Read more

கடலூர் தடுப்பணை விபத்து.. சிறுவர்கள் தடையை மீறி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணைகளில் குளிப்பதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணை நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் … Read more

வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து 10 மணிநேரம் நடைபெற்ற சிலம்பாட்டம்..!

பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி அடுத்த நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் தொடர்ந்து 10 மணி நேரம் சிலம்பாட்டம் நடைபெற்றது. இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்த போட்டியில், மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். Source link

16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகதமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை … Read more

"நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள்" காரணம் கூறும் மதுரை ஆதீனம்

“அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது. இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். ஆன்மீகத்தை திருடிக்கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள்” என மதுரை ஆதீனம் பேசியுள்ளார். மேலும் “இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள்” என்றும் அவர் பேசியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், “பாரதியார் தற்பொழுது … Read more