TNTET தேர்வு; இப்படி படிங்க… ஈஸியா பாஸ் ஆகலாம்!

Tamilnadu TET exam syllabus and preparation tips in Tamil: ஆசிரியர் கனவோடு இருக்கும் பலரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் டெட் தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் எப்படி தயாராவது என்பது குறித்து இப்போது பார்ப்போம். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. … Read more

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து.. முதியவர் உயிரிழப்பு.!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள கத்தாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமாரவேலு (வயது 76). இவர் சொந்த வேலை காரணமாக ராணிப்பேட்டை நோக்கிய தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளி அருகே வரும்போது பின்னால் வந்த லாரி, குமரவேல் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குமரவேலு சம்பவ இடத்திலேயே … Read more

தமிழ்நாட்டில் முதல் முறையாக பி.ஏ.5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்தில் 8 பேருக்கு பி.ஏ.5 மற்றும் 4 பேருக்கு பி.ஏ.4 வகை உருமாறிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் முதல் முறையாக பி.ஏ.5 வகை கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டதாகவும் கூறினார். Source link

பண்ருட்டி | கெடிலம் ஆற்றில் மூழ்கி கர்ப்பிணி, 4 சிறுமிகள் உட்பட 7 பேர் பலி

பண்ருட்டி: கெடிலம் ஆற்றில் குளிக்கச்சென்று மூழ்கியவர்களை காப்பாற்றச் சென்றவர்கள் ஒருவர்பின் ஒருவராக மூழ்கியதை அடுத்து 7 பேர் பலியான சோகம் இன்று நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ஏ.குச்சிப்பாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் இன்று குளிக்கச் சென்ற கர்ப்பிணி மற்றும் நர்ஸிங் மாணவிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏ.குச்சிப்பாளையம் அருகே கீழ்அருங்குணத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக ஏ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துராமன் மகள் சுமுதா (16), … Read more

சென்னையில், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த கேரள இளைஞர்; சதி வேலையா? என போலீசார் விசாரணை

BSNL network hacked by Kerala youth in Chennai: சென்னையில், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்து தனியாக டெலிபோன் எக்ஸ்சென்ஞ் நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னையில் கடந்த 15 நாட்களில் 72 லேண்ட்லைன் இணைப்புகளில் இருந்து சுமார் 10,000 – 15,000 அழைப்புகள் என அதிகப்படியான அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் ஆய்வு … Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி.. பச்சிளம் குழந்தையை கொன்ற கணவன்.. ராணிப்பேட்டை அருகே நடந்த கொடூரம்..!

பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் தோல்ஷாப் பகுதியை சேர்ந்த மனோ. இவருக்கு திருமணமாகி அம்சநந்தினி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் நடு இரவில் தூங்கி கொண்டிருந்த போது குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். அக்கம்பக்கதில் குழந்தையை தேடும் போது வீட்டின் குளியலறையில் 20 லிட்டர் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்தது. … Read more

ஊராட்சி அலுவலக கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்திய ஊழியர் பணிநீக்கம்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தியதாக கூறப்படும் தற்காலிக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். சாமல்பட்டியை சேர்ந்த சுதாகர் என்ற அந்த நபர் 4 ஆண்டுகளுக்கு மேலாக சத்துணவு பிரிவில் டேட்டா எண்டிரி ஆப்பரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். சுமார் 20 நாட்களுக்கு முன் அவரது செல்போனை உறவினர் ஒருவர் ஆராய்ந்த போது ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஆபாச காணொளிகள் இருந்துள்ளன. அதிர்ச்சி அடைந்த அந்த நபர், சுதாகரின் செல்போனை சம்பந்தப்பட்ட அலுவலக … Read more

2 நாளில் ரூ.8.35 லட்சம் வசூல் : சென்னை மலர் கண்காட்சி முதல்வர் பார்வையிட்டார் 

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள முதலாவது சென்னை மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி கடந்த ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்தது. கலைவாணர் அரங்கில் 3ம் தேதி தொடங்கிய மலர் கண்காட்சி … Read more

கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு? அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ராதாகிருஷ்ண விளக்கம்

கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், சுகாதாரத்துறை டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து திமுக அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார். திமுக அரசில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது என்று குற்றம்சாட்டி வருகிறார். அந்த வகையில், அண்மையில், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவில் முறைகேடு நடந்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். இந்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு … Read more

சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்.! 

குடி(சாதி)வாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும் என்று, தமிழக அரசுக்கு  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பீகாரில் குடி(சாதி)வாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சரியான நேரத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்நடவடிக்கையை முன்னெடுத்த அம்மாநில அரசிற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். ஆண்டாண்டு … Read more