சரக்கு ரயிலின் கண்டெய்னர் மீது நின்ற படி பயணித்த நபர்-மின் இணைப்பை துண்டித்து காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், சரக்கு ரயில் கண்டெய்னர் மீது நின்றபடி ஆபத்தான முறையில் பயணித்த நபரை, மின் இணைப்பைத் துண்டித்து பயணிகளின் உதவியுடன் ரயில் நிலைய அதிகாரி மீட்டார். காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற சரக்கு ரயில், வாணியம்பாடி ரயில் நிலையம் வந்த போது அதன் மீது ஒருவர் நின்றபடி பயணித்ததைக் கண்டு பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து ரயிலை 3வது நடைமேடையில் நிறுத்தி மின் இணைப்பை துண்டித்த ரயில் நிலைய அதிகாரி, பயணிகள் உதவியுடன் அந்த … Read more

தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி, சென்னை காவல் துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஸ்வரி, … Read more

தாம்பரம் காவல் ஆணையராக பொறுப்பேற்கும் அமல்ராஜ் யார்? பின்னணி என்ன?

தாம்பரம் காவல் ஆணையரகத்தின் 2வது காவல் ஆணையராக  கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த அமல்ராஜ்? தொகுப்பில் பார்க்கலாம். தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் சென்னை பெருநகர காவல்துறை இரண்டாக பிரிக்கப்பட்டது. தாம்பரம் தனி காவல் ஆணையரகமாகவும், ஆவடி தனி ஆணையரகரமாகவும் பிரிக்கப்பட்டன. தாம்பரம் காவல் ஆணையகத்திற்கு 20 காவல் நிலையங்களும், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு 25 காவல் நிலையங்களும் என பிரிக்கப்பட்டன. தாம்பரம் முதல் காவல் ஆணையராக ரவி நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக … Read more

கோவையில் ஸ்விக்கி ஊழியரை தாக்கிய காவலர்… கண்ணீர் விட்ட இளைஞர் – நடந்தது என்ன?

கோவை பீளமேடு ஃபன்மால் அருகே, ஸ்விகி நிறுவனத்தில் உணவு டெலிவிரி செய்யும் நபரை, போக்குவரத்து காவலர் தாக்கும் வீடியா சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த ஊழியர் மோகனசுந்தரம், கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக, அந்த போக்குவரத்து காவலருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. இதையடுத்து சதீஷ் கன்ட்ரோல் ரூமுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், அந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் … Read more

தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் – தமிழ்நாடு அரசு.! யார் இந்த அமல்ராஜ் ஐபிஎஸ்.!

தமிழ்நாடு முழுவதும் 44 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தாலி குறிப்பாக தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்தும், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், தாம்பரம் காவல் ஆணையராக இருந்த டிஜிபி ரவி அண்மையில் பணி ஓய்வு பெற்ற நிலையில், தமிழ்நாடு போலீஸ் அகாதமி … Read more

சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கு: சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது உறுதியானால் உரிமம் ரத்து – மருத்துவ இயக்குனர்.!

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், குழந்தைகள் நல காப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ இயக்குனர் விஸ்வநாதன், இந்த வழக்கில் மேலும் சில மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக கூறினார். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார். Source … Read more

கெடிலம் சோகம் | உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குக; அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுவதால் இதனைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெடிலம் விபத்து குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ஏ.குச்சிப்பாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் இன்று குளிக்கச் சென்ற கர்ப்பிணி மற்றும் நர்ஸிங் மாணவிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவுகளில் … Read more

முதல் பார்வையில் தெரிந்த விலங்கு எது? அப்போ உங்க கேரக்டர் இதுதான்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகின்றன. அதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கு வேலை தருகிற ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஒருவரின் ஆளுமையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இந்த வித்தியாசமான ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பல விலங்குகள் மங்கலாக எளிதில் கண்டுபிடிக்க … Read more

புள்ளிவிவரம் சொல்லும் அண்ணாமலை இதை பற்றி சொல்ல முடியுமா? அண்ணாமலைக்கு சவால் விடுத்த கேஎஸ் அழகிரி.!

சென்னை அருகே கல்பாக்கத்தில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டார். திருமண நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி தெரிவித்ததாவது, “அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பாஜக குறித்து கூறியது சரியாகத்தான் இருக்கும். அவருடைய கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மன்மோகன்சிங் தலைமையிலான அரசில் தமிழகத்தில், சேதுசமுத்திர திட்டம்,செம்மொழியாக தமிழ் மொழியை அறிவித்தது, இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை அதிகமாக அமைக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு, மாணவர்களுக்கு … Read more

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. இளைஞர் உட்பட 7 பேர் கைது.!

நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியில், 10ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். வடகாடு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்ற இளைஞருக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன் பிறகு, செல்போன் மூலம் மாணவியுடன் கந்தசாமி பேசி வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் … Read more