இறந்தபின்பு மீண்டும் உயிர்பெற நம்பிக்கை.. தனது உடலை உறைநிலையில் வைப்பதற்காக பதிவு செய்த பீட்டர் தீல்

இறந்தபின்பு மீண்டும் உயிர்பெற வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையில், பிரபல பே பால் நிறுவனத்தின் தலைவரும் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவருமான பீட்டர் தீல் தனது உடலை உறைநிலையில் வைப்பதற்காக பதிவு செய்து வைத்துள்ளார். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வகையிலான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம் என்ற நம்பிக்கையில், அமெரிக்காவிலுள்ள அல்கார் என்ற அமைப்பு இறந்து போன மனித உடல்களையும் விலங்குகளின் உடல்களையும் கிரையோனிக்ஸ் என்ற முறையில் உறைநிலையில் பதப்படுத்தி பாதுகாத்து வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த … Read more

ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் ஒடேசாவில் உள்ள உணவு சேமிப்பு கிடங்கில் தீ விபத்து..!

உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான ஒடேசாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் உணவு சேமிப்பு கிடங்கு தீ பற்றி எரிந்தது. கிர்கிவ், கெர்சன், மைகோலே , மற்றும் ஒடேசாவில் 24 மணி நேரத்தில் 16 ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒடேசாவில் உள்ள உணவு சேமிப்பு கிடங்கில் சக்திவாய்ந்த ஏவுகணை வீசப்பட்டதில் அந்த கட்டிடத்தில் பெருந்தீப்பற்றி கொண்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க ராணுவத்தினரும், தீயணைப்பு வீரர்களும் போராடிய காட்சிகளை … Read more

கோடிக்கணக்கான இந்திய ரூபாய்களை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம்: ரஷ்யா

புதுடெல்லி: கோடிக்கணக்கான இந்திய ரூபாய்களை பயன்படுத்த முடியாத நிலையில் தாங்கள் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்த தடை காரணமாக டாலரில் வர்த்தகம் மேற்கொள்வது பாதிக்கப்பட்டது. பொருளாதார தடையை அடுத்து குறைந்த விலையில் தனது கச்சா எண்ணெயை விற்க ரஷ்யா முன்வந்ததால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை அதிக அளவில் வாங்கத் தொடங்கின. இந்தியாவிடம் இருந்து … Read more

காங்கோ நாட்டில் இரு கிராமங்களை மூழ்கடித்த வெள்ளம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு..!

காங்கோ நாட்டில் இரு கிராமங்களை மூழ்கடித்த வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த திடீர் மழையால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. புஷுஷு மற்றும் நியாமுகுமி ஆகிய இரு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமான நிலையில், இதுவரை 401 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அம்மாகாண ஆளுநர் தியோ நக்வாபிட்ஜே காசி தெரிவித்துள்ளார். இந்நாளை தேசிய துக்க நாளாக காங்கோ அரசு … Read more

ரஷ்யாவின் உரால் மலைப்பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயில் சிக்கி 4 பேர் பலி..!

ரஷ்யாவின் உரால் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் பரவிய காட்டுத்தீயால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. வெர்த்லோவ் பகுதியில் 54 ஆயிரம் பரப்பளவில் அரியவகை மரங்கள், செடி, கொடிகள் தீக்கிரையாகின. கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் 4 ஆயிரத்து 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெர்த்லோவ் பகுதியில் துப்பாக்கி வெடிமருந்து குடோனில் பற்றிய தீ, உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அருகில் வசித்தவர்கள் அனைவரும் உடனடியாக … Read more

ரஷ்யாவின் வெற்றிநாள் கொண்டாட்டங்கள்! இரண்டாம் உலக போர் நினைவு தினத்தில் உக்ரைன் போர்

Rehearsal Of May 9 Victory Day Russia: உக்ரைன் மோதல் மற்றும் உக்ரைனில் வெற்றி தினத்தை கொண்டாடுவதை, இந்த ஆண்டு வெற்றி தினத்தின் கருப்பொருளாக வைத்திருக்கிறது ரஷ்யா 

ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவருக்கு தூக்கு! ஈரானில் நடக்கும் கொடூரம்!

‘தண்டனைகளின் நோக்கம் சமூக பயத்தை ஏற்படுத்துவதே தவிர, குற்றத்தை எதிர்த்துப் போராடுவது அல்ல. கடந்த பத்து நாட்களில், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் ’ என மனித உரிமைகள் அமைப்பு குரல் கொடுத்துள்ளது.

King Charles III Video : மன்னர் 3ம் சார்லஸ் முடி சூட்டு விழாவில் பேய்… பகீர் கிளப்பும் வீடியோ!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடி சூட்டு விழாவில் மர்ம உருவம் ஒன்று நடந்து செல்லும் வீடியோ வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது. மன்னர் முடிசூட்டு விழாகடந்த 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செம்படர் மாதம் காலமானார். இதையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். ராணி இரண்டாம் … Read more

60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வழித்தட திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்ல சீனாவும், பாகிஸ்தானும் ஒப்புதல்!

60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வழித்தட திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கும் எடுத்துச் செல்ல சீனாவும், பாகிஸ்தானும் ஒப்புதல் அளித்துள்ளன. சீன வெளியுறவு அமைச்சர் கின் காங், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இடையே இஸ்லாமாபாத்தில் நடந்த சந்திப்பின்போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. நிதி நெருக்கடியில் தவிக்கும் தலிபான் அரசாங்கம் இந்த திட்டத்தில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும், இதன் மூலம் உள்கட்டமைப்பு முதலீட்டைப் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டின் வளங்களின் மீது சீனா … Read more

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நமட்கி தேசிய பூங்கா முழுவதும் பனி படர்ந்து, வெண்போர்வை போர்த்தியது போல ரம்மியாக காட்சியளிக்கிறது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பனிப்பொழிவுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகளில் வரும் 10ம் தேதி வரை உறைபனி நீட்டிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link