Should Punjab students be expelled?: Canadian PMs response to Indian MP | பஞ்சாப் மாணவர்கள் வெளியேற்றமா?: இந்திய எம்.பி.,க்கு கனடா பிரதமர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொரன்டோ: போலி கல்லூரி அனுமதி கடிதங்களுடன் வந்து சிக்கியுள்ள பஞ்சாப் உள்பட இந்தியாவைச் சேர்ந்த, 700 மாணவர்கள், கனடாவில் இருந்த வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,யின் கேள்விக்கு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ விளக்கம் அளித்துள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைகளில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் அதிகம் செல்கின்றனர். குறிப்பாக பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் செல்கின்றனர். இவ்வாறு, … Read more

துருக்கி அதிபருக்கு ஹிட்லரை போன்ற மீசை வரைந்த சிறுவன் கைது..!

துருக்கியில், அதிபர் எர்டோகனின் புகைப்படத்திற்கு ஹிட்லரை போன்ற மீசை வரைந்த 16 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர். அண்மையில் அங்கு நடைபெற்ற தேர்தலின்போது, எர்டோகன் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில், சிறுவன் ஒருவன் ஹிட்லரை போன்ற மீசையை வரைந்து உள்ளான். மேலும், அதில் அவதூறான கருத்துக்களை எழுதியதாகவும் கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுவனை கண்டுபிடித்த போலீசார், அவனது வீட்டை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டதில், மீசை வரைந்ததை சிறுவன் ஒப்பு கொண்டான். கடந்த ஆண்டு 16,000க்கும் மேற்பட்டோர் … Read more

பிரான்ஸில் 4 குழந்தைகள் உள்பட 6 பேருக்கு கத்திக் குத்து – தாக்கிய நபர் கைது

பாரிஸ்: பிரான்ஸின் ஆல்ப்ஸ் நகரில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸின் ஆப்ல்ஸ் நகரின் அன்னெசி சதுக்கத்தில் இன்று காலை விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்பட பலரை நபர் ஒருவர் கத்தியால் குத்தி உள்ளார். இதில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. இவர்களில் இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் … Read more

உக்ரைன் அணை உடைப்பு: 600 சதுர கி.மீ மேல் சூழ்ந்த வெள்ளம் – 3 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் கக்கோவ்கா அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளம் 600 சதுர கிலோமீட்டருக்கு மேல் சூழ்ந்துள்ளது. கெர்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் ஐந்தரை மீட்டர் உயரத்துக்கு சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. ரப்பர் படகுகள் மற்றும் தண்ணீரில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில்சென்று ஆய்வு மேற்கொண்ட அதிபர் … Read more

அணுசக்தியால் பேரழிவு… அதுவும் இந்த ஆண்டே – பாபா வாங்காவின் கணிப்பு!

Baba Vanga Prediction: 2023ஆம் ஆண்டில் ஒரு பெரிய அணுமின் நிலைய வெடிப்பைப் பற்றி பாபா வாங்கா எச்சரித்ததாகக் கூறுகின்றனர், இது ஆசியாவில் பெரும் பிரளயத்தை உண்டாக்கும் எனவும் கூறுகின்றனர்.

வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து கிம் ரகசிய உத்தரவு: தென் கொரியா தகவல்

பியாங்யாங்: வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவை, அந்நாட்டு அதிபர் கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது. இது குறித்து தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறும்போது, “வடகொரியாவில் நாளுக்கு நாள் மக்களிடம் கஷ்டம் அதிகரித்து வருகிறது. மோசமான பொருளாதாரச் சூழல் காரணமாக வட கொரியாவில் தற்கொலைகள் 40% அதிகரித்துள்ளது. வட கொரியாவின் கோங்ஜின் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு வட கொரியாவில் … Read more

விளையாடிக்கொண்டிருந்த பள்ளி குழந்தைகளை கத்தியால் குத்திய சிரிய நாட்டு அகதி கைது..!

பிரான்ஸில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாகக் குத்திய சிரிய நாட்டு அகதியை பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர். அனஸி நகரில், சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட பள்ளி குழந்தைகள் பூங்காவில் விளையாடிய போது அவர்களை ஒருவன் கத்தியால் தாக்கத் தொடங்கினான். பாதுகாப்பு படையினர் அவனை உடனடியாக சுற்றிவளைத்து கைது செய்தனர். அவன் சிரியாவிலிருந்து சட்ட விரோதமாக பிரான்ஸுக்கு வந்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. படுகாயமடைந்த 6 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் … Read more

North Koreas Kim Jong Un passes secret order banning suicide | தற்கொலை செய்ய தடை: வட கொரிய அதிபர் உத்தரவு

பியாங்யாங்: வட கொரியாவில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தற்கொலை செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதை அடுத்து, அங்கு தற்கொலைக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். தற்கொலை என்பது ஒருவர் தனக்கு தானே சுய விருப்பத்தின்படி செய்யும் கொலையாகும். வெறுப்பு, கோபம், மன அழுத்தம், பயம், வறுமை போன்ற பல காரணங்களால் தற்கொலை நடக்கிறது. இது குற்றமாக கருதப்பட்டாலும், அந்த எண்ணத்தில் இருந்து மீண்டு வர பல வழிகளும் … Read more

Italian MP creates history by breastfeeding in Parliament amid applause | பார்லிமென்டில் குழந்தைக்கு பாலூட்டிய பெண் எம்.பி.,: குவியும் பாராட்டு

ரோம்: இத்தாலி பார்லிமென்டில், அந்நாட்டு பெண் எம்.பி., ஒருவர் , அழுத தனது 2 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த செயலுக்கு மற்ற எம்.பி.,க்கள் பாராட்டினர். 36 வயதான பெண் எம்.பி., கில்டா ஸ்போர்டெல்லோ என்பவர் பார்லிமென்டிற்கு தனது 2 மாத ஆண் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது, குழந்தை திடீரென அழத் துவங்கியது. இதனை கேட்ட பார்லிமென்ட் அமைதியானது. குழந்தை பசிக்காக அழுவதை தெரிந்து கொண்ட கில்டா ஸ்போர்டெல்லோ அங்கேயே குழந்தையை அமைதிப்படுத்தி பாலூட்ட துவங்கினார். இதன் … Read more