அமெரிக்க வானில் பறந்த மேலும் ஒரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது

வாஷிங்டன், அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீன உளவு பலூன் பறப்பது கடந்த 1-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில் 4-ந் தேதி போர் விமானம் மூலம் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 10-ந் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பதை கண்டறிந்த அமெரிக்க ராணுவம் அதை போர் விமானம் மூலம் … Read more

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த சுற்று பணி நீக்கம்..? – ஊழியர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க திட்டம்..!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே கடந்தாண்டு 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், நடப்பு ஆண்டிலும் அடுத்த சுற்று பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  வரவு-செலவு திட்டங்கள் குறித்த அறிக்கை வெளியிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மேலும் சில ஊழியர்களை மெட்டா பணிநீக்கம் செய்யலாமென முன்னணி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. புதிய பணிநீக்கங்கள் தொடர்பாக மெட்டா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றாலும், மேலாளர் உட்பட ஒரு சில பணியில் இருப்பவர்கள் பணி நீக்கம் … Read more

“பிரபாகரனின் உடலை டிஎன்ஏ ஆய்வு செய்ய முடியுமா..?” – இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் மீண்டும் கேள்வி

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்து பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை முற்றிலும் புறம் தள்ளிவிட முடியாது என தமிழ்த்தேசியக்கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர்,2009-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பேரணி உள்ளிட்ட பல நேரங்களில், பிரபாகரனின் உடல் டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட்டு அவரது உடல்தான் என நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பி இருந்ததாகவும் அதற்கு இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறினார். Source link

‘டன்கின் டோனட்ஸ்’ விளம்பரத்தில் பென் அஃப்லெக், ஜெ-லோ தம்பதியர்

அமெரிக்காவில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட Coffee Shop-களை நடத்திவரும் டன்கின் டோனட்ஸ் நிறுவனம், Super Bowl ரக்பி தொடரின்போது பிரத்யேகமாக ஒளிபரப்ப, ஹாலிவுட் நடிகர் Ben Affleck, அவரது மனைவியும், பாப் பாடகியுமான ஜெனிபர் லோபஸையும் வைத்து விளம்பரம் தயாரித்துள்ளது. அதில், டன்கின் டோனட்ஸ் கடையில் Ben Affleck பணியாற்றுவது போலவும், அவரை அடையாளம் கண்ட சிலர் செல்பி எடுத்துசெல்வது போலவும் விளம்பரம் நகர்கிறது. இறுதியாக, கடைக்கு வரும் ஜெனிபர் லோபஸ், கணவர் டோனட் கடையில் பணியாற்றுவதை … Read more

துருக்கிக்கு 30 மில்லியன் டாலர் நன்கொடை அளித்த பாக். தொழிலதிபர்

அமெரிக்காவில் வசித்துவரும் பாகிஸ்தான் நாட்டு தொழிலதிபர் ஒருவர், துருக்கி, சிரியாவில் நிலநடுக்க நிவாரண பணிகளுக்காக சுமார் 248 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். அந்த நபரின் மனித நேயத்தை பாராட்டி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். பாகிஸ்தான் அரசாங்கம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அவர் ஏன் துருக்கிக்கு உதவினார் என கேள்வி எழுப்பியும், ஷெபாஸ் ஷெரீப் போன்ற ஊழல்வாதிகள் ஆட்சியில் இருப்பதால் தான் அவர் பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை எனவும் அந்நாட்டு … Read more

துருக்கி நிலநடுக்கத்தில் கிராமமே தரைமட்டம்| Village Leveled in Turkey Earthquake

ஆதியமன், கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு, ௩௫ ஆயிரம் பேர் பலியாகியுள்ள நிலையில், துருக்கியின் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் தரைமட்டமாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த ௬ம் தேதி கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பல வலுவான நிலநடுக்கங்களும், நுாற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதில் துருக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் தென் பகுதி மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பலத்த … Read more

அமெரிக்க வான் வெளியில் பறந்த மற்றொரு மர்ம பொருள் வீழ்த்தப்பட்டது| Another mysterious object in the US airspace has been shot down

வாஷிங்டன், அமெரிக்க வான் பகுதியில் பறந்த மற்றொரு மர்மப் பொருள் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது, கடந்த ௧௦ நாட்களில் நடந்துள்ள நான்காவது சம்பவமாகும். அமெரிக்காவின் தெற்கு கரோலினா அருகே, ௭௦ ஆயிரம் அடி உயரத்தில் பறந்த சீன பலுான், கடந்த ௪ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. இதை, சீனா உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைத்துள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், ௧௦ம் தேதி, அலாஸ்கா வான் பகுதியில் பறந்த மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதற்கடுத்த … Read more

சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்.. அனைவரையும் கவர்ந்த வான் சாகச நிகழ்ச்சி..!

ஆசியாவின் மிகப் பெரிய ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமான கண்காட்சியை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கண்காட்சியையொட்டி நடைபெற்ற போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் வான்சாகசம் காண்போரை வெகுவாக கவர்ந்தது…. பாதுகாப்புத்துறை சார்பில் ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் 1996ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி14வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறவுள்ள … Read more