நன்கொடையாக உக்ரைனுக்கு தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டரை வழங்கிய பிரிட்டன்…!

பிரிட்டன் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டரை நன்கொடையாக வழங்கியதற்காக பிரிட்டனுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் (Oleksii Reznikov) நன்றி தெரிவித்துள்ளார். கருங்கடலுக்கு அருகே பறக்கும் ஹெலிகாப்டரின் வீடியோவை பகிர்ந்துள்ள ஒலெக்ஸி, இது உக்ரைன் கடற்படைக்கு வலுசேர்க்கும் என தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ், உக்ரைனுக்கு ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.  Source link

பிரான்ஸ் தொலைக்காட்சியில் அஜித்தின் துணிவு திரைப்படம் குறித்து கலந்துரையாடல்..!

பிரான்ஸில் திரையிடப்பட்ட அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு, பிரெஞ்ச் திரைப்படங்களைவிட அதிக வரவேற்பு இருப்பதாக, அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் விவாதிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில், நடிகர் அஜித்துக்கு பாரீஸில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக பேசப்பட்டுள்ளது. இவ்வளவு நாட்கள் துணிவு திரைப்படம் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடுவது மிகப்பெரிய காரியம் என்றும் அந்த நிகழ்ச்சியில் பேசப்பட்டுள்ளது. பிரான்ஸ் தொலைக்காட்சியில் பேசப்பட்ட இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். Source link

தாலிபான்களுக்கு பயந்து துணிக்கடை பெண் பொம்மைகளும் ‘மாஸ்க்’ அணிந்துள்ள அவல நிலை!

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வந்ததில் இருந்து பெண்களின் நிலை மோசமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களை ஒடுக்கும் வகையில் பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்கும், வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தாலிபான்களின் பயம் மிகவும் அதிகமாக இருப்பதால், கடைகளில் உள்ள பெண் பொம்மைகளின் முகங்கள் கூட மறைக்கப்படுகின்றன. சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்களில், துணிக்கடையில் இருக்கும் பெண் பொம்மைகளின் முகமும் தலையும் மறைக்கப்பட்டிருப்பதைக் … Read more

முடிவெடுக்க தயங்கும் மேற்குலக நாடுகளால் எங்கள் மக்கள் கொல்லப்படுகிறார்கள் – உக்ரைன்

கீவ்: மேற்குலக நாடுகளின் முடிவெடுக்காத நிலையால் மக்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரேனிய ஜனாதிபதி ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறும்போது, ” நீங்கள் ஆயுதங்கள் வழங்கி உக்ரைனுக்கு உதவலாம். ரஷ்யாவை தோல்வி அடைய செய்வதை தவிர்த்து இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேறு வழியில்லை. மேற்குலக நாடுகளின் முடிவெடுக்காத தன்மையால் உக்ரைனியர்கள் நாளும் கொல்லப்படுகிறார்கள். தாமதமாகும் ஒவ்வொரு நாளும் உயிர்கள் பறிபோகின்றன. விரைவாக யோசியுங்கள்” என்று தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று சுமார் 50 நாடுகள் உக்ரைனுக்கு … Read more

பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்து குப்பைக்கூளமாக காட்சியளிக்கும் ட்ரினா நதி

போஸ்னியாவில் உள்ள ட்ரினா நதி பிளாஸ்டிக் கழிவுகளால் கடுமையாக மாசுபட்டிருப்பதைக் காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. அண்மையில் மாண்டினீக்ரோ மற்றும் போஸ்னியாவில் பெய்த கனமழையால் ட்ரினா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, ஆற்றின் ஒரு பகுதி முழுவதும் கழிவுகள் சூழ்ந்து குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. ட்ரினா நதி தற்போது குப்பைக் கிடங்கு போல மாறியுள்ளதால் , சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் ஒருவர் வேதனை தெரிவித்தார். Source link

ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. சோதனை!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், எப்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றார். இவர், அதற்கு முன்பு பாரக் ஒபாமா காலத்தில் துணை அதிபராகவும் இருந்தார். இந்த நிலையில், துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை ஜோ … Read more

சகோதரியின் திருமண விழாவில் இந்திப் பாடலுக்கு உணர்வுப் பூர்வமாக நடனம் ஆடும் இளம்பெண்

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சகோதரியின் திருமண விழாவின் போது இந்தி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Ang Laga De என்ற பாடலுக்கு அந்த இளம்பெண் உணர்வுப் பூர்வமாக ஆடும் நடனத்தை திருமணத்திற்கு வந்திருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். அந்த பெண்ணும் பாடலின் வரிக்கேற்ப மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியவாறு நடனம் ஆடினார். Source link

பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் சமீப காலமாக அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. குறிப்பாக காவல்நிலையங்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்கள் அரங்கேற்றப்படுகின்றன. அந்த வகையில் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள சர்சத்தா மாவட்டத்தில், நவ்ஷேரா சாலையில் போலீசார் சோதனைச் சாவடியில் இருந்தபடி தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 3 … Read more

தலைநகர் கிளர்ச்சி எதிரொலி: பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம்..!!

பிரேசிலியா, பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார். இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் இனாசியோ லுடா சில்வா கடந்த 1-ந் தேதி பதவியேற்றார். இதற்கிடையில் லுடா அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் … Read more