சூப்பர் மேனாக இனி நடிக்கப்போவதில்லை – ஹென்றி கேவில்..!

சூப்பர் மேனாக இனி நடிக்கப்போவதில்லை என ஹாலிவுட் நடிகர் ஹென்றி கேவில் அறிவித்துள்ள நிலையில், ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்திற்கு அவரது பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசி 4 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அந்த கதாப்பாத்திரத்தை டேனியல் கிரேக் ஏற்று நடித்த நிலையில், புதிய படத்திற்கு வேறொரு நடிகரை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2005ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்வில், தான் டேனியல் கிரேக்கிற்கு அடுத்த … Read more

உலகம் பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தானை பார்க்கிறது – ஜெய்சங்கர் சாடல்

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் நேற்று இந்தியாவின் தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைமையில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் ஐ.நா.சபையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘இந்தியாவை விட எந்த நாடும் பயங்கரவாதத்தை சிறப்பாக பயன்படுத்தியதில்லை’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இணை மந்திரி ஹினா ரபானி ஹர் கூறியது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், பாக். மந்திரி ஹினா … Read more

மலேசியா: திடீர் நிலச்சரிவில் சிக்கிய 51 பேர் – மீட்புப்பணிகள் தீவிரம்

கோலாலம்பூர், மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகே கூடாம் அமைத்து பலர் தங்கிருந்தனர். இந்நிலையில், இந்த வேளாண் பண்ணையில் இன்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். ஆனால், நிலச்சரிவில் … Read more

பிரான்ஸில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடராஜர் சிலை ஏலத்தை நிறுத்திய தமிழக போலீசார்..!

பிரான்ஸில் ஏலம் விடப்படவிருந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை, தமிழகத்தைச்சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டதால், ஏலம் நிறுத்தப்பட்டது. பிரான்ஸில் கிறிஸ்டிஸ் டாட் காம் என்ற இணையதளத்தில், நடராஜர் சிலை ஏலம் விடப்படுவதாக, புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சிலை, கடந்த 1972ம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள கோதண்ட ராமேஸ்வர் கோயிலில் திருடப்பட்ட சிலை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஏல மையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏலம் … Read more

கில், புஜாரா சதம் விளாசல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சாட்டோகிராம்: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி, 512 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 513 ரன் என்ற இமாலய இலக்குடன் ஆடிய வங்கதேசம் 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் சுப்மன் கில், புஜாரா சதம் விளாசினர். வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சாட்டோகிராமில் நடக்கிறது. முதல் … Read more

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் இன்று அதிரடி தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கியூ: உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் இன்று அதிரடி தாக்குதல் துவக்கியது. இன்று நடந்த சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மூலம் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. உக்ரைன் வீரர்களும் தங்களது படை பலத்தால் நாட்டை காப்பாற்ற தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உக்ரைன் மீது போர் ; 2022 பிப். 24 ல் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து ரஷ்யா மீதான … Read more

2 லட்சம் பேரை களமிறக்கி கீவ் நகரில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்: உக்ரைன் படைத் தளபதி

கீவ்: “மீண்டும் கீவ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. அதற்காக படைகளை ஒருங்கிணைத்து வருகிறது. பிப்ரவரி அல்லது மார்ச்சில் மிகக் கொடூரமான தாக்குதல்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று உக்ரைன் படைத் தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல் தற்போது ஓராண்டை நெருங்கவுள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவ் மீது ரஷ்யா உக்கிரமான தாக்குதலுக்கு ஆயத்தமாவவதாகவும், அதற்காக புதிதாக … Read more

“பின்லேடன் உயிருடன் இல்லை. ஆனால்…” – ஜெய்சங்கருக்கு பாக். வெளியுறவு அமைச்சர் சர்ச்சை பதில்

நியூயார்க்: “ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை. ஆனால், மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்” என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு கருத்துப் பதிவு செய்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் நேற்று நடந்தது. இதில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கிய இந்தியா 2 முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. இதில் ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் … Read more

உக்ரைனில் மின்சாரம் இல்லாத மக்களுக்காக அடுப்புகள் தயாரிப்பு

உக்ரைனில் மின்சாரம் இல்லாத மக்களுக்காக, லிதுவேனியா நாட்டு நிறுவனம் கார் உதிரி பாகங்களிலிருந்து அடுப்புகளை உருவாக்கி வருகிறது. மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்களால், உக்ரைன் மக்கள் ஏராளமானோர் குளிரிலும், இருளிலும் தவித்து வருகின்றனர். இதனால் லிதுவேனியாவை சேர்ந்த கல்விஸ் நிறுவனம், பயன்படுத்திய கார் பாகங்களை சிறிய அடுப்புகளாக மாற்றி வருகிறது. பழைய வீல் ரிம்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அடுப்புகள், பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. Source link

5 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்: பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பிரான்சின் கிழக்கு பகுதியில் உள்ள லியோன் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஏழு மாடிகள் கொண்ட குடியிருப்பு உள்ளது. இங்கு அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடியிருப்பு முழுவதும் பரவியதால், தூக்கத்தில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து சுமார் 65 … Read more