இந்தியாவுடனான உறவு காரணமாக இந்தியர்களுக்கு சவுதி விசா இனி காவல்துறை நற்சான்றிதழ் தேவையில்லை..!

சவுதி விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள், இனி காவல்துறையின் நற்சான்றிதழ் அளிக்க தேவையில்லை என இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியாவுடனான பலமான உறவு மற்றும் கூட்டு காரணமாக, விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு, காவல்துறையின் நற்சான்றிதழ் தருவதிலிருந்து விலக்கு அளிப்பதாக சவுதி அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சவுதியில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டுவதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.  Source link

வீடு வாங்கலையோ வீடு! 5 பெட்ரூம் வீடு வாங்கினா டெஸ்லா கார் ஃப்ரீ

நியூசிலாந்தில் ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால், வீடுகளை விற்பதற்காக பல அதிரடி சலுகைகளை விற்பனையாளர்கள் வழங்குகிறார்கள். அதிரடி விலைக் குறைப்பு, அதிக தள்ளுபடி, நம்ப முடியாத சலுகைகள் என வீடுகளை மக்களுக்கு விற்க பலவிதமான யுக்திகளை ரியல் எஸ்டேட் துறையினர் மேற்கொண்டுள்ளனர். வீடு விற்காது என்ற அவநம்பிக்கையை போக்கி, வித்தியாசமாக முயற்சித்து சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அதில் சுவாராசியமான விளம்பரம் ஒன்று, நிலைமையை புரிய வைக்கிறது.  புதிதாகக் கட்டப்பட்ட ஐந்து படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்கினால், … Read more

சீன அதிபர் கனடா பிரதமரை அச்சுறுத்தவில்லை; வைரல் வீடியோவிற்கு விளக்கம்.!

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஜி – 20 உச்சி மாநாடு நேற்று நிறைவு பெற்றது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி … Read more

கனடா பிரதமர் டிரூடியோவை கடிந்து கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்

கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்த இரண்டு தலைவர்களும் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். ஜி 20 மாநாட்டுக்கு இடையே ரகசியமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விவரங்களை டிரூடோ செய்தியாளர்களிடம் கசிய விட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கடுமையான முறையில் டிரூடோவை சாடிய வீடியோ காட்சி வேகமாகப் பரவியது. Source link

வளைகுடா நாடுகளுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா நடவடிக்கை..!

வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்காக இந்தியா வரும் 24 ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், பக்ரைன் ஆகிய 6 நாடுகள் கொண்ட கவுன்சிலுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தத்தால் இந்நாடுகளிலிருந்து கச்சா எண்ணை, இயற்கை எரிவாயுவை இந்தியா இறக்குமதி செய்யும் என்றும் முத்து, பட்டைதீட்டப்பட்ட கற்கள், உலோகங்கள், மின் இயந்திரங்கள், இரும்பு, எஃகு மற்றும் … Read more

குவைத்தில் 2017-க்குப் பின் முதன்முறையாக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் 7 பேருக்கு மரண தண்டனை

குவைத், குவைத்தில் 7 பேருக்கு ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டில் இது போன்ற கூட்டு மரண தண்டனை நிறைவேற்றம் மிகவும் அபூா்வம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அரசுக்குச் சொந்தமான ‘குனா’ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மத்திய சிறைச் சாலையில் நேற்று தூக்கிலிடப்பட்டனா். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவா்களில் 3 குவைத் நாட்டு ஆண்கள், ஒரு குவைத் நாட்டுப் … Read more

Canada PR: நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை தளர்த்தியது கனடா

கனடாவில், இனி நிரந்தர குடியிருப்பாளர்களை தேர்வு செய்யும் வழிமுறை, இதுவரை இருந்த விதிகளில் இருந்து மாறியதாக இருக்கும். தேசிய தொழில்சார் வகைப்பாடு 2021 என்ற விதியை, குடியுரிமை திட்டங்களுக்காக, கனடா செயபடுத்தியுள்ளது. இதன்மூலம் கனடாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கானவர்களின் பட்டியலில் 16 தொழில்களை சேர்ந்தவர்களும் இடம் பெறுகின்றனர். தேசிய தொழில் வகைப்பாடு என்பது, கனடாவில் ஒரு தொழில் செய்ய அல்லது வேலையில் சேர்வதற்கான திறன் மற்றும் கல்வித் தகுதியை கண்டறியும் வழிமுறை ஆகும்.  நிரந்தர குடியுரிமை கோருபவர்களின் விண்ணப்பங்களை … Read more

“இது சரியல்ல” – கனடா அதிபர் ட்ரூடோவிடம் கோபித்துக்கொண்ட சீன அதிபர் – வைரலாகும் வீடியோ

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் நடந்து முடிந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், சீன அதிபர் ஜி ஜின்பிங் கோபித்துக்கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15, 16 தேதிகளில் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. இந்தக் கூட்டத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தியா, சீனா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ, … Read more

அமெரிக்க நாடாளுமன்ற சபையில் பெரும்பான்மை பெற்ற குடியரசு கட்சியினருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து!

வாஷிங்டன், அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. … Read more

இந்தோனேஷியாவில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில் சோதனை ஓட்டம்..!

இந்தோனேஷியாவில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலுக்கான வெள்ளோட்டம் சீன அதிபர் முன்னிலையில் நடத்தப்பட்டது. சீன அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தோனேஷியாவின் ஜகர்தா-பான்டங்க்  இடையே இந்த ரயில் விடப்படும் நிலையில் அதன் கட்டமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எனவே, டீகல் லூர் ரயில் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு நடத்தப்பட்ட ரயிலின் சோதனை ஓட்ட வீடியோ காட்சிகளை சீன அதிபர் ஜீ ஜின்பிங், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடாடோ ஆகியோர் பாலியில் இருந்து … Read more