பூமியின் புகைப்படத்தை அனுப்பிய ஆர்டிமிஸ் 1 ராக்கெட்..!

நிலவை ஆராய, ஆர்டிமிஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம், பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. நேற்று அதிகாலை சக்திவாய்ந்த ஆர்டிமிஸ் 1 ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. 9 மணி நேர பயணத்திற்கு பின், சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து பூமியை புகைப்படம் எடுத்து ஓரியன் விண்கலம் அனுப்பிய நிலையில், 1972-ம் ஆண்டுக்கு பின், நிலவுக்கு செல்லும் விண்கலம் ஒன்று பூமியை புகைப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓரியன் விண்கலத்தில் … Read more

ஈரானில் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு..!

தெஹ்ரான், ஈரானின் தென்மேற்கு மாகாணமான குசெஸ்தானில் உள்ள இசே நகரில் உள்ள சந்தையில் நேற்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, நேற்று இரண்டாவதாக ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இசேவில் உள்ள சந்தை பகுதியில் போராட்டத்தில் … Read more

தெஹ்ரான் மெட்ரோ நிலையத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு: வெளியான பரபரப்பு காட்சிகள்

தெஹ்ரான்: ஈரானின் தெஹ்ரான் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெட்ரோ நிலையத்தில் பயணிகள் பலர் ரயிலுக்காக காத்து கொண்டிருந்தனர். இதில் போராட்டக்காரர்களும் கலந்திருந்தனர். அப்போது அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் ஹிஜாப் அணியாத பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால், மெட்ரோ நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் தொடர்ந்து “நாங்கள் போராடுவோம்” என்று முழக்கமிட்டனர். இந்த தள்ளுமுள்ளு காரணமாக பல … Read more

பாலியல் வன்கொடுமை..! – மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை!

இஸ்தான்புல்லில் பாலியல் வன்கொடுமை மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் உள்ளிட்ட குற்றத்திற்காக இஸ்லாம் மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மத்திய கிழக்கு நாடான துருக்கியைச் சேர்ந்தவர் அட்னான் அக்தார் (66). இவர் அந்நாட்டில் உள்ள இஸ்தான்புல்லில் செயல்படும் “ஏ9” என்ற தொலைக்காட்சி சேனலில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். நிகழ்ச்சியின் போது தன்னைச் சுற்றி மேக் அப் போட்டப்படி குறைந்த ஆடைகள் அணிந்த பெண்கள் கூட்டத்தின் … Read more

பயங்கரவாதம் நாட்டின் முக்கிய பிரச்னை: பாக்., பிரதமர் வேதனை| Dinamalar

இஸ்லாமாபாத்: பயங்கரவாதம் பாகிஸ்தானின் முக்கிய பிரச்னையாக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், அதனை அந்நாடு கட்டுப்படுத்த வேண்டும் எனவும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. ஐ.நா.,வில் கூட பல நாடுகளும் பயங்கரவாதத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியிருக்கின்றன. ஆனால், தற்போது தான் பயங்கரவாதம் முதன்மையான பிரச்னையாக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி … Read more

ஜாக் Vs எலான் மஸ்க் – ட்விட்டரின் முன்னாள், இந்நாள் சிஇஓ-க்கள் வார்த்தைப் போர்

நியூயார்க்: ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்ஸி, தற்போதைய சிஇஓ எலான் மஸ்குக்கு எதிராக மறைமுக தொனியில் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் முழுமையடைந்து, எலான் மஸ்கின் கட்டுப்பாட்டுக்குள் அந்நிறுவனம் வந்தது. முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாக பொறுப்பு வகித்து வந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, … Read more

வேன் கதவைத் திறந்து பாப்கார்ன் திருடும் கரடி

அமெரிக்காவின் Tennessee மாகாணத்தில் அடர் கருப்பு நிற கரடி ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வேனின் கதவைத் திறந்து பாப்கார்னை திருடும் வீடியோ வெளியாகி உள்ளது. வடக்கு கரோலினாவைச் சேர்ந்த குடும்பத்தினர் Gatlinburg பகுதியில் தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு அறையில் தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று நின்று கொண்டிருந்த வேனின் கதவை லாவகமாக திறந்து அங்கிருந்த பாப்கார்ன் பாக்கெட்டை எடுத்துச் செல்கிறது. Source link

அடேங்கப்பா! இத்தனை வருஷ தண்டனையா: இஸ்லாம் போதகருக்கு 8,658 ஆண்டு சிறை: பாலியல் வழக்கில் தீர்ப்பு| Dinamalar

இஸ்தான்புல்: இஸ்தான்புல்லில் பாலியல் வன்கொடுமை மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் உள்ளிட்ட குற்றத்திற்காக இஸ்லாம் மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துருக்கியை சேர்ந்தவர் அட்னான் அக்தார் (66). இவர் அந்நாட்டில் உள்ள இஸ்தான்புல்லில் செயல்படும் ஏ9 என்ற தொலைக்காட்சி சேனலில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். நிகழ்ச்சியின்போது தன்னைச்சுற்றி மேக்அப் போட்டப்படி குறைந்த ஆடைகள் அணிந்த பெண்கள் கூட்டத்தின் மத்தியில் அவர் மத பிரசாரங்களை வழங்கி வந்தார். … Read more

கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்! மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியது வட கொரியா

சியோல்: வடகொரியா ‘அடையாளம் தெரியாத ஏவுகணையை’ ஏவியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அண்மையில் சில மாதங்களாக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் ஐந்துக்கும் அதிகமான ஏவுகணை பரிசோதனைகள் நடத்திய வடகொரியா, இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை  பரிசோதித்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.  வடகொரியா கிழக்கு கடலை நோக்கி “அடையாளம் தெரியாத ஏவுகணையை” ஏவியது என்று தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 17, வியாழக்கிழமை) ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப் … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 6 போலீஸ்காரர்கள் பலி| Dinamalar

பெஷாவர் : பாகிஸ்தானில், போலீஸ்காரர்கள் சென்ற வேன் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஆறு பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மர்வாத் மாவட்டத்தில், ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஐந்து போலீஸ் கான்ஸ்டபிள்கள் வேனில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், வேனை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், போலீசார் ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து … Read more